தலைமை நீதிபதி செயல்பாடு சரியில்லை.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

  டெல்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

  உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். நாட்டின் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீடியாக்களை சந்தித்தனர்.

  We made a request to the CJI for a rectification but were turned down: Supreme court judges

  செல்லமேஸ்வர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவது எதுவும் சரியில்லை. இதுகுறித்து தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சில விவகாரங்கள் தோல்வியில்தான் முடிந்தன.

  சில மாதங்களுக்கு முன்பு முக்கிய விவகாரம் ஒன்றில் 4 நீதிபதிகள் கையெழுத்திட்டு கடிதம் அளித்தோம். அந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் நிலவுகிறது.

  உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என்பதால், வேறு வழியில்லாமல், எங்கள் கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்பினோம். தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து எடுத்துக்கூறியபோதிலும் கூட பலன் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் மீடியாக்களை சந்தித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  We made a request to the CJI for a rectification in the certain matter but were turned down. We will give a copy of the letter to the press. We are not running politics here and we are nobody to impeach the Chief Justice of India: Justice Chelameswar

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற