For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 3-இன்று: அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் மேகாலயாவிலும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் கனமானது முதல் மிக கனமான மழை பெய்யக் கூடும். பீகார், ஒடிசா, நாகாலாந்து, திரிபுரா, கடலோர கர்நாடகாவின் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.

Weather Forecast for next 5 days

செப்டம்பர் 4: பீகாரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலும் கன மழை பெய்யும். அன்றைய தினம், வங்கக்கடலில், மேலடுக்கு காற்று மண்டலம், உருவாக வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 5: பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 6: மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும். பீகாரின் ஒரு சில பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 7: பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுராவில் கன மழை பெய்யக்கூடும்.

English summary
Meteorological Analysis by IMD relesed and heavy rain warning issued for north India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X