மேற்கு வங்கத்தில் நாளை மறுவாக்குப்பதிவு.. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்.. என்ன காரணம்?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்த 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் அங்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளன.

இதில் 152 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதன்பிறகு 2வது கட்டமாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) 149 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாக்ரஹட் மேற்கு மற்றும் டைமண்ட் ஹார்பர் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி இந்த 2 தொகுதிகளுக்கு உட்பட்ட 11 வாக்குச்சாவடி மையங்களுக்கு நாளை (மே 2) மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மறுவாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications