என்ன செய்யபோகிறார் எடியூரப்பா? இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு-முழு விபரங்கள்- வீடியோ

  பெங்களூரு: பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில் முதல்வர் எடியூரப்பா பதவியை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

  காங்கிரஸ் 78 இடங்களையும் ஜேடிஎஸ் 37 இடங்களையும் கைப்பற்றியது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

  சுயேட்சைகள் ஆதரவு

  சுயேட்சைகள் ஆதரவு

  தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்த ஜேடிஎஸ்-காங்கிரஸுக்கு 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரும் ஜேடிஎஸ்- காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  எடியூரப்பாவுக்கு அழைப்பு

  எடியூரப்பாவுக்கு அழைப்பு

  117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

  15 நாட்கள் அவகாசம்

  15 நாட்கள் அவகாசம்

  இதைத்தொடர்ந்து கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.

  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

  ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் , மஜத கூட்டாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  ரிசார்ட்டுகளில் சிறை

  ரிசார்ட்டுகளில் சிறை

  எடியூரப்பாவுக்கு தற்போது 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்கும் வகையில் வெளி மாநில ரிசார்ட்டுகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

  என்ன செய்யப்போகிறார்

  என்ன செய்யப்போகிறார்

  இந்நிலையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் 104 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சியை தக்க வைக்க நாளை மாலைக்குள் எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Yeddyurappa has 104 MLAs supports only. To prove the majority 112 MLAs support needs. The question raised that what Yeddyurappa will do to prove the majority.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற