For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2016: ஒரு ரூபாயில் வரவு செலவு தெரிஞ்சுக்கங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசுக்கு வருமானமாக கிடைக்கும் ஒரு ரூபாயில் 21 காசுகள் கடன் மூலம் பெறப்படுவதாக 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 19 காசுகள் வட்டி செலுத்துவதற்கு செலவிடப்படுகிறது.

2016 -17 பட்ஜெட்டிற்கான நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரை, வரவில் அதிகபட்சமாக கடன் மற்றும் பிற கடன்கள் 21 பைசாவாகவும், கார்ப்பரேட் வரி 19 பைசாவாகவும், வருமான வரி மூலம் கிடைக்கும் பங்கு 14 பைசாவாகவும் உள்ளது.

மத்திய அரசுக்கு அடுத்த 2016-17-ம் நிதி ஆண்டில் கிடைக்கும் நிதி ஆதாரத்தில், ஒரு ரூபாய்க்கான வரவு-செலவு பற்றி பார்க்கலாம்.

ஒரு ரூபாயில் வரவு

ஒரு ரூபாயில் வரவு

கடன் - 21 பைசா, பெருநிறுவனங்கள் வரி வருவாய் -19 பைசா, வருமான வரி -14 பைசா, சுங்கம் -09 பைசா, கலால் -12 பைசா,சேவை மற்றும் இதர வரிகள் -09 பைசா, வரி அல்லாத வருவாய் -13 பைசா, கடன் அல்லாத முதலீடு - 03 பைசா.

ஒரு ரூபாயில் செலவு

ஒரு ரூபாயில் செலவு

பிற திட்டமிடப்படாத செலவுகள் 12 பைசா, வட்டி 19 பைசா, மானியம் 10 பைசா, பாதுகாப்பு 10 பைசா, மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 23 பைசா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான திட்டங்களுக்கான செலவு 9 பைசா, திட்டமிடப்பட செலவுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 5 பைசா, மத்திய அரசு .திட்டங்களுக்கு 12 பைசா.

மறைமுக வரிகள்

மறைமுக வரிகள்

63 காசுகள் நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கையில் குறிப்பிட்டார்.அரசின் செலவினங்களில் மாநிலங்களுக்கு ஒதுக்கும் வரி வருமானமாக ஒதுக்கும் பங்காகும்.

கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வரி

இந்த வகையில் 23 காசுகள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படுகின்றன. அரசின் மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக விளங்கும் கார்ப்பரேட் வரி தற்போது ஒரு ரூபாயில் 19 காசுகளாகக் குறைந்துள்ளது. இதேபோல சேவை வரி மூலம் திரட்டப்படும் வருமானம் எவ்வித மாற்றமும் இன்றி 9 காசுகளாக நீடிக்கிறது. வருமான வரி வருமானமும் மாற்றம் இன்றி 14 காசுகளாக தொடர்கிறது.

மறைமுக வரி

மறைமுக வரி

மறைமுகமான வரி வருமானத்தில் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் 21 காசுகளாகும். சுங்க வரி மூலமான வருமானம் 21 காசுகளாக உயர்ந்துள்ளது.வரி இல்லாத பிற இனங்கள் மூலமான வருமானம் 13 காசுகளாகும். இது பொதுத் துறை பங்கு விலக்கல் நடவடிக்கை மூலமும், 3 காசுகள் கடன் அல்லாத பிற முதலீடுகள் மூலமாகவும் அரசு திரட்ட உள்ளது.

English summary
According to the Budget announced by Jaitley, here is a glimpse of where the rupee will be spent and where it is generated from:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X