பெண் போலீஸ் அதிகாரியை தாக்கினாரா ஜிக்னேஷ் மேவானி... 2வது முறை கைது பற்றிய பரபர தகவல்
கவுஹாத்தி: பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் பதிவிட்ட வழக்கில் கைதான குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் போலீஸ் அதிகாரியை அவர் தாக்கினாரா என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் உள்ளார்.
இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு பெற்றது.

ஜிக்னேஷ் மேவானி கைது
இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நள்ளிரவில் குஜராத் மாநிலம் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் அவரை அசாம் போலீசார் கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்தனர். பிறகு அவர் விமானத்தில் அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்பு படுத்தி டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனுக்கு பின் மீண்டும் கைது
இந்த வழக்கில் கோக்ரஜார் நீதிமன்றம் நேற்று மாலை ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் இந்த விடுதலை அதிக நேரம் நீடிக்கவில்லை. மாறாக அடுத்த சில மணிநேரங்களில் ஜிக்னேஷ் மேவானியை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கவுஹாத்தியில் இருந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தபோது அவர் பெண் போலீஸ் அதிகாரியை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து இருக்கையில் தள்ளியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கைது ஏன்
இதுபற்றி பார்பெட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமிதவ சின்ஹா கூறுகையில், ‛‛ஏப்ரல் 21 அன்று காலை - கோக்ரஜாரை சேர்ந்த ஒரு பெண் காவல் ஆய்வாளர் பார்பேட்டா சாலை போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஜிக்னேஷ் மேவானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பார்பெட்டா சாலை போலீஸ் காவலில் உள்ளார். 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்'' என்றார்.

என்னென்ன வழக்குகள்
மேலும் போலீசார் கூறுகையில், ‛‛அதாவது கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து ஜிக்னேஷ் மேவானியை போலீஸ் நிலையம் அழைத்து சென்றபோது அவர் பெண் போலீஸ் அதிகாரியை திட்டி அவரை காரின் இருக்கையில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏப்ரல் 21ல் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்'' என்றனர். இதுபற்றி சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி கூறுகையில், ‛‛ஜிக்னேஷ் மேவானி மீது இந்திய தண்டனை சட்டப்பிரவு 294(பொது இடத்தில் ஆபாசசெயல்), 354(பெண்ணை தாக்குதல்), 353(தாக்குதல் அல்லது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 323 (காயப்படுத்துதல்)ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஜிக்னேஷ் மேவானி மறுப்பு
மேவானியின் வழக்கறிஞரும் மூத்த வழக்கறிஞருமான அங்ஷுமன் போரா கூறுகையில், ‛‛இது முற்றிலும் பொய்யான மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதுகுறித்து போலீசார் நீதிமன்றத்தில் எதுவும் கூறவில்லை. திடீரென்று பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இது திடீரென்று எங்கிருந்து வந்தது?. இத்தகைய செயல் கொடுமையானது" என்றார். மேலும் இந்த குற்றச்சாட்டுகளை ஜிக்னேஷ் மேவானி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இந்த செயலை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்துள்ளனர்'' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications