காதலனுடன் ஓடிப்போன 23 வயது மனைவி.. சிறையில் தள்ளியே தீருவேன் என துடிக்கும் 62 வயது கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானேவில் 23 வயது மனைவியை கண்டுபிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று 62 வயது முதியவர் புகார் கொடுத்துள்ளார்.

நௌபாடாவைச் சேர்ந்தவர் சதீஷ் (62). வாசை பகுதியைச் சேர்ந்தவர் லிசா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 39 ஆண்டுகள் வயது வித்தியாசம்.

திருமணத்துக்கு பின்னர் லிசா, அம்ருதா எனது தனது பெயரை மாற்றி கொண்டார். இந்நிலையில் தானே காவல் நிலையத்தில் சதீஷ் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

 என்ன புகார்

என்ன புகார்

தங்களது திருமண வாழ்க்கைக்கு பெரிதும் தொல்லைக் கொடுத்து வந்தவர் மனைவி அம்ருதாவின் சகோதரி மோனிகா ஆவார். இவர்தான் என்னை விட்டு என் மனைவி அம்ருதா பிரிந்து செல்ல காரணமாக இருந்தார். தற்போது மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

 ஒண்டி குடித்தனத்தில்

ஒண்டி குடித்தனத்தில்

எங்களுக்கு திருமணம் நடைபெற்றவுடன் எனது மைத்துனியும் எங்களுடன் தங்கினார். எங்களது சிறிய வீடு என்பதால் என் தாய் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். இதனால் எனது மனைவிக்கும் தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

 என் மீது என் மைத்துனி ஆசைப்பட்டார்

என் மீது என் மைத்துனி ஆசைப்பட்டார்

என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் மீது மைத்துனிக்கு ஆசை இருந்தது. அதனால் எங்களுடன் தங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து என் மனைவியை மூளைசலவை செய்து என்னை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

 சிறையில் அடைக்க வேண்டும்

சிறையில் அடைக்க வேண்டும்

அம்ருதாவுக்கு என் மீது அளவுகடந்த ஆசை. திருமணத்துக்கு முன் சிறையில் இருந்தது போல் அவரது வீட்டில் இருந்தார். நான்தான் அவரை மீட்டு திருமணம் செய்து கொண்டேன். அம்ருதாவின் தந்தை இறந்த பிறகு அவரது சொத்துகளை நான்தான் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். அவர்கள் என்னை 2 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்தனர்.

 குஜராத்தில் உள்ளார்

குஜராத்தில் உள்ளார்

தற்போது என் மனைவி குஜராத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அவரை மீட்டு தர கோரி பலமுறை புகார்கள் அளித்துவிட்டேன். ஆனால் போலாீஸாரோ அம்ருதா வீடு திரும்ப மறுப்பதால் எங்களால் அவரை கட்டாயமாக கொண்டு வர முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

 ஓயமாட்டேன்

ஓயமாட்டேன்

என் மனைவிக்கு அவர் செய்தது தவறு என்பதை உணர்த்த வேண்டும். அதற்காக அவரை கண்டுபிடித்து சிறையில் வைக்க வேண்டும். அவர் என்னை விட்டு பிரிந்து சென்றதற்கான தண்டனையாகும். அதுவரை ஓயமாட்டேன் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். அம்ருதா, மோனிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சதீஷ் புகார் அளித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அம்ருதாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 கட்டாய திருமணம்

கட்டாய திருமணம்

திருமணத்துக்கு முன்னர் அம்ருதாவை சதீஷ் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது குடும்பத்தினரை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வாத்து சதீஷ், அம்ருதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நிம்மதியாக இருந்த இவர்களது வாழ்க்கையில் புயல் வீசியதால் முதியவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police have sent summons to Lisa Apte, 23, who left her husband, Satish Apte, 62, months after their marriage, sparking an exchange of police complaints between Satish and his in-laws.
Please Wait while comments are loading...