For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாயாவதி "கம்"முன்னு ஆதரவு கொடுத்தால் காங்கிரஸ் "ஜம்"முன்னு ஆட்சி புரியும்!

எந்தவித நிபந்தனையும் இன்றி மாயாவதி காங்கிரசுக்கு ஆதரவு தருவாரா?

Google Oneindia Tamil News

போபால்: மாயாவதியை நம்பலாமா, நம்பக்கூடாதா? இது ஒரு கேள்வி. காரணம், அவர் உள் குத்து இல்லாமல், நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தால்தான் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியும்.

இழுபறியாக கிடக்கும் மத்திய பிரதேசத்துக்கு ஒரு தீர்வு எடுத்து வந்து தந்திருக்கிறார் மாயாவதி. சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன?

இவர்தான் தற்போதைய வெற்றியை தீர்மானிப்பவராக கணிக்கப்பட்டு வருகிறார். அப்படியே ஆதரவு அளித்தாலும் இது ஒரு தற்காலிக தீர்வுதான். ஏனென்றால் ஊழலில் திளைத்த மாயாவதியை நாட்டு மக்கள் முழுமையாக அங்கீகரிக்கவே மாட்டார்கள்.

என்ன நிச்சயம்?

என்ன நிச்சயம்?

அதேபோல, காங்கிரசை சமாஜ்வாடிக்கு மிகவும் பிடிக்கும்தான். அதற்காக நாளை பாஜகவுடன் கை கோர்க்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? தன் கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியை கேட்டால் காங்கிரசில் கேட்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பாஜக முயல வாய்ப்பு?

பாஜக முயல வாய்ப்பு?

அப்படியே மாயாவதி காங்கிரசுக்கு ஆதரவு தந்துவிட்டார் என்றே வைத்துகொள்வோம், மாயாவதி கட்சி எம்எல்ஏக்களை வளைத்து போட பாஜக முயலாது என்பதற்கும் என்ன உத்தரவாதம்?

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

ஏனெனில் பாஜக மத்திய பிரதேசத்தின் தோல்வியை ஒருபோதும் தாங்கி கொள்ளாது. ராஜஸ்தானை போல நிறைய வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தால்கூட பரவாயில்லை. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரசுக்கு மிகவும் நெருக்கி வந்துவிட்டது.

விட்டு தராது

விட்டு தராது

இதை இழந்துவிட பாஜக ஒருபோதும் விரும்பாது. ஏதாவது குள்ளநரித்தனத்தை இதில் காட்ட முயற்சி செய்தே ஆகும். மாயாவதி காங்கிரசுக்கு விசுவாசமாக இருந்தாலும் சரி, அல்லது பாஜகவுக்கு மறைமுகமாக விசுவாசமாக இருந்தாலும் சரி, மத்திய பிரதேசத்தை பாஜக அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு தராது.

பாஜக பக்கம் சாய்ந்தால்?

பாஜக பக்கம் சாய்ந்தால்?

எனவே இப்போதுள்ள சூழ்நிலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மாயாவதியை காங்கிரஸ் முழுவதுமாக நம்புவதா நம்ப வேண்டாமா என்பதை ஒருமுறை தீர்க்கமாக சிந்தித்துகொள்வதே நல்லது. அதை விட முக்கியமானது மாயாவதி மீது சிபிஐ வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அதை சரி செய்ய அவர் பாஜக பக்கமும் சாயக் கூடும்.

English summary
Mayawati said her Bahujan Samaj party would support the Congress in Madhya Pradesh. But It is not known whether she will support Congress without any condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X