For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தம் அமலாகும்.. ஒரு இஞ்ச் கூட பின்வாங்கப் போவதில்லை.. அமித் ஷா அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன ?

    ஜெய்ப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒரு இஞ்ச் கூட பின்வாங்க போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் இன்று நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போது, அமித் ஷா இவ்வாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி, மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கின்றன. பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

    Will not budge an inch on its decision to implement the Citizenship Amendment Act: Amit Shah

    உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் இது பற்றி விவாதிக்க வாருங்கள். அப்படி இல்லாவிட்டால் இத்தாலிய மொழியில் இந்த சட்டத்தை மொழியாக்கம் செய்து உங்களுக்கு தருகிறேன். அப்போது தான் உங்களால் வாசிக்க முடியும்.

    குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போலியான தகவல்களையும், பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறது. இந்த நாட்டின் இளைஞர்கள் தவறுதலாக தெருக்களுக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.

    ஆட்சியில் இருந்தும்... அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தோல்வி... புறக்கணித்த மக்கள் ஆட்சியில் இருந்தும்... அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தோல்வி... புறக்கணித்த மக்கள்

    எந்த அளவுக்கு பொய் பரப்பப்பட்டாலும் சரி, மக்களிடமும் சிறுபான்மையினரிடமும் உண்மையை எடுத்துக் கூற, பாஜக தயாராக இருக்கிறது. எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒரு இன்ச் கூட பின்வாங்கப் போவதில்லை. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த போவதாக பாஜக அறிவித்துள்ளது. நாளை முதல் பாஜக தலைவர்கள் வீடு வீடாக சென்று சட்டம் தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Union home minister Amit Shah on Friday said the government will not budge an inch on its decision to implement the Citizenship Amendment Act despite the opposition criticism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X