For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திங்கள் கிழமை பதவியேற்பு.. யாருக்கு அமைச்சரவையில் இடம்.. குமாரசாமி பதில்!

கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, திங்கள் கிழமை பதவி ஏற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக கலவரத்துலயும் குமாரசுவாமி குதூகலம்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, திங்கள் கிழமை பதவி ஏற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் நடத்த சட்டசபை தேர்தலில் பாஜக மொத்தம் 104 இடங்களில் வென்றது. அந்த கட்சி ஆட்சி அமைத்தும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எடியூரப்பா இன்று மாலை பதவி விலகினார். காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது..

    Will take my oath as CM of Karnataka on Monday says, JD(S), Kumaraswamy

    இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. ஆளுநரை சந்தித்துவிட்டு அவர் அளித்த பதவி ஏற்கும் விவரங்களை வெளியிட்டார்.

    அதில், திங்கள்கிழமை முதல்வராக பதவியேற்கிறேன். திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு மேல் பதவியேற்கிறேன். காங்கிரஸ் மற்றும் மஜத நிர்வாகிகளுடன் இன்று இரவு ஆலோசனை நடத்த உள்ளேன். யாரையெல்லாம் அமைச்சரவையில் சேர்ப்பது என்பது பற்றி ஆலோசனை செய்ய இருக்கிறோம்.

    பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. சட்டசபையை கூட்டி விரைவில் பெரும்பான்மையை மிக விரைவில் நிரூபிப்பேன். எப்போதும் போல காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் இணைந்து ஹோட்டலில் இருப்பார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Will take my oath as CM of Karnataka on Monday says, JD(S), Kumaraswamy. Will sworn as as CMOK in Kanteevara ground Monday afternoon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X