For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 வருஷமா 'டீ' மட்டுமே குடிக்கும் வினோத மூதாட்டி.. திட உணவுகளே சாப்பிடுவதில்லையாம்.. எப்புட்றா?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: திட உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல் வெறும் டீ மற்றும் ஹெல்த் டிரிங்ஸ் 50 வருடங்களுக்கும் மேலாக மேற்குவங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் சாப்பிட வில்லையென்றாலே கை கால்கள் எல்லாம் வெட வெடத்து போகிட்டது என்று சொல்லும் அளவுக்கு நடுங்கும் நிலையில் 50 வருடமாக உணவு சாப்பிடாமல் இந்த வயதான பெண் வாழ்ந்து வருவது நெட்டிசன்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல் வெறும் டீ மற்றும் ஹெல்த் டிரிங்ஸ்களை மட்டுமே குடித்து 50 வருடங்களுக்கும் மேலாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் சாப்பிட வில்லையென்றாலே கை கால்கள் எல்லாம் வெட வெடத்து போகிட்டது என்று சொல்லும் அளவுக்கு நடுங்கும் நிலையில், 50 வருடமாக உணவு சாப்பிடாமல் இந்த வயதான பெண் வாழ்ந்து வருவது நெட்டிசன்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்துணர்ச்சியை பெற ஒரு 'டீ'

புத்துணர்ச்சியை பெற ஒரு 'டீ'

மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் டீக்கு ஒரு தனி இடம் உண்டு. அலுவலக வேலை பார்ப்பவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களும் வேலையில் புத்துணர்ச்சியை பெற கட்டாயம் டீ அடித்தே ஆக வேண்டும் என சொல்வதை கேள்வி பட்டு இருப்போம். டீ குடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதுவும் வெளியூர்களில் வேலை நிமித்தமாக தங்கியிருக்கும் பேச்சுலர்கள் பலருடைய காலை உணவே டீ யாகத்தான் இருக்கும்.

76 வயது மூதாட்டி

76 வயது மூதாட்டி

இப்படி டீயை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் தான். அளவுக்கமதிகமாக டீ சாப்பிட்டாலும் உடல் நல பிரச்சினைகள் ஏற்படுவதாக சுகாதார வல்லுனர்கள் கூறும் கருத்தாகவும் உள்ளது. ஆனால், மேற்கு வங்காளத்தில் ஒரு பெண் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் வெறும் டீ மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ் மட்டுமே அருந்தி வருகிறாராம். இத்தனைக்கும் அவருக்கு தற்போது 76 ஆகிறது. இந்த வினோத பெண் குறித்த விவரம் வருமாறு:-

திட உணவுகளே உட்கொள்வது கிடையாது

திட உணவுகளே உட்கொள்வது கிடையாது

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஷ்யாம்பஜார் பகுதி அருகே உள்ள பெல்திகா என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் அனிமா சக்ரபூர்த்தி. இவர் கடந்த 50 ஆண்டுகளாக திட உணவுகளை உட்கொள்வதே இல்லையாம். வெறும் டீ மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ் என நீர் ஆகாரங்களை மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார். இந்த வினோத பழக்கம் இந்தப்பெண்ணுக்கு எப்படி வந்தது என்பது குறித்து அவரது மகன் கூறியதாவது:-

 வெறும் தண்ணீர், டீ, ஜூஸ்

வெறும் தண்ணீர், டீ, ஜூஸ்

"நாங்கள் முன்பு ஏழ்மை நிலையில் இருக்கிறோம். அப்போது வீட்டு வேலைகளுக்கு எங்கள் அம்மா செல்வதுண்டு. அங்கு கிடைக்கும் உணவுகளை எங்களுக்கு தந்து விட்டு வெறும் தண்ணீர், டீ, ஜூஸ் ஆகியவற்றை மட்டுமே எங்கள் அம்மா குடித்து வாழ்க்கையை கழிப்பார். இந்தப் பழக்கம் நாளடைவில் அவருக்கு அப்படியே தொடர்ந்து விட்டது" இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவர் விளக்கம்

மருத்துவர் விளக்கம்

உணவே சாப்பிடாமல் வெறும் திரவ உணவுகளை மட்டுமே 76 வயதிலும் ஆரோக்கியமாக இந்தப் பெண் இருப்பது குறித்து அப்பகுதியில் உள்ள மருத்துவர் கூறியதாவது:- நமது உடல் இயக்கத்திற்கும் உயிர் வாழ்வதற்கும் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் தேவை. அது உணவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று இல்லை. நீர் ஆகாரமாக கூட இருக்கலாம். எந்த வகையில் சாப்பிடுகிறோம் என்பதை விட அதில் ஊட்டச்சத்து உள்ளதா என்பதுதான் முக்கியம். நீண்ட நாள் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு திரவ உணவுகளே கொடுக்கப்படுகிறது.

English summary
A woman from West Bengal has lived for more than 50 years without taking any solid food, only tea and health drinks. Netizens have been surprised that this old woman has been living without eating food for 50 years in such a state that if she does not eat for a day, her arms and legs will be torn off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X