கள்ளக்காதலால் கணவனை தீர்த்துக் கட்டும் பெண்கள்... தெலங்கானாவில் தொடர்கதையாகும் கைதுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : கள்ளக்காதல் விவகாரத்தால் கடந்த 2 மாதத்தில் மட்டும் கணவனையே மனைவி தீர்த்து கட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தெலங்கானாவில் இது தொடர்பான கைதுகள் அதிகரித்து வருவதாக காவல்துறை பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவைச் சேர்ந்த 30 வயது பெண் தேவபள்ளி ஜமுனா, யெல்லையா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் கச்சிகுடா பகுதியில் வீட்டு வேலை செய்து வருகின்றனர். ஜமுனாவிற்கு ஏற்கனவே கிஷன் என்பவரை திருமணம் செய்து உறவில் முறிவு ஏற்பட்டதில் ஹைதராபாத் வந்து பணியாற்றி போது தான் யெல்லையாவை திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே யெல்லையாவுடன் மனஸ்தாபம் ஏற்பட்டத்தில் முதல் கணவனுடனே சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். சில நாட்களில் யெல்லையா வேலையை விட்டதோடு ஜமுனாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். யெல்லையா திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம் கேட்டு நச்சரித்த கணவன்

பணம் கேட்டு நச்சரித்த கணவன்

இந்நிலையில் தொடர்ந்து யெல்லையா பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால், தனது சகோதரர்களுடன் சேர்ந்து யெல்லையாவை கொன்று உடலை ரயில் தண்டவாளம் அருகே வீசிவிட்டு வந்துள்ளனர். அதன் பின்னர் யெல்லையாவை காணவில்லை என்று ஜமுனாவே போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளார்.

கொலையை மறைத்த ஜமுனா

கொலையை மறைத்த ஜமுனா

புகாரின் மீது ஜமுனாவிடம் கச்சிகுடா போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார். இதனால் போலீசார் ஜமுனாவை சந்தேகிக்க கடைசியில் ஜமுனாவே கொன்று காணவில்லை என்று நாடகமாடியது தெரிய வந்தது. ஜமுனா அளித்த தகவலின் பேரில் யெல்லையாவின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஜமுனா நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதிகரிக்கும் கள்ளக்காதல் கொலைகள்

அதிகரிக்கும் கள்ளக்காதல் கொலைகள்

இது மட்டுமின்றி கடந்த சில நாட்களாகவே தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை மனைவியே கொன்று போலீசாரிடம் பிடிபடும் சம்பவம் அதிகரித்து வருவதாக பதிவேடுகள் கூறுகின்றன. ஜனவரி 9ம் தேதி குண்டூரில் ஸ்ரீவித்யா என்ற பெண் தனது கணவர் நரேந்திராவை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதல் உறவால் கொலை

கள்ளக்காதல் உறவால் கொலை

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது சகோதரி கணவருடனான உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் நண்பர்களின் உதவியோடு கணவனுக்கு மதுவில் சையனைடு கொடுத்து கொன்றது அம்பலமானது. இதே போன்று ஜனவரி 8ம் தேதி சவுட்டுப்பல் காவல்துறையினர் ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்தனர். கள்ளக்காதலன் கார்த்திக்கின் நண்பர்கள் 3 பேருடன் இணைந்து மனைவி ஜோதி கணவனை கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

ஆள்மாறாட்டம் செய்து நாடகம்

ஆள்மாறாட்டம் செய்து நாடகம்

கடந்த டிசம்பர் 11ம் தேதி கணவனை கொன்றுவிட்டு காதலன் முகத்தில் தீக்காயம் ஏற்படுத்தி பிளாஸ்டிச் அறுவை சிகிச்சை செய்து பித்தலாட்டம் செய்த சுவாதி என்ற பெண் கைது செய்யப்பட்டார். கணவனை கொன்று காட்டில் புதைத்ததோடு காதலன் முகத்தில் தீக்காயத்தை ஏற்படுத்தி கணவர் குடும்பத்தார் செலவிலேயே அறுவை சிகிச்சை செய்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் திடீரென சுவாதியின் மாமியாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் புகார் அளித்தன் பேரில் நடந்த விசாரணையில் குட்டு அம்பலமானது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Wives killing husbands due to illegal relationship is increasing in Telangana from December to till date nearly 4 murder and arrests done over this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X