For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலோபதி முட்டாள்தனமானது என விமர்சனம்: மருத்துவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்!

Google Oneindia Tamil News

ஹரித்வார்: அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது என விமர்சனம் செய்ததற்காக மருத்துவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் யோகா குரு என அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ்.

 வேளாண் சட்டங்களை கண்டித்து.. மே 26-ல் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்.. தி.மு.க ஆதரவு! வேளாண் சட்டங்களை கண்டித்து.. மே 26-ல் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்.. தி.மு.க ஆதரவு!

ஹரித்வாரில் ஆயுர்வேதம் மற்றும் அலோபதி மருத்துவ முறை இணைந்த கொரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார் ராம்தேவ். ஆனால் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என்பது அம்பலமானது.

அலோதி முட்டாள்தனமானது

அலோதி முட்டாள்தனமானது

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவமுறையால்தான் கொரோனாவுக்கு மக்கள் பலியாகின்றனர். இது ஒரு முட்டாள்தனமான சிகிச்சை முறை என சகட்டுமேனிக்கு வசைபாடினார். இது நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்களை கொந்தளிக்க வைத்தது.

மருத்துவர்கள் சீற்றம்

மருத்துவர்கள் சீற்றம்

இது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் ராம்தேவை தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டது. இது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் ராம்தேவை தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டது.

ஹர்ஷ்வர்தன் தலையீடு

ஹர்ஷ்வர்தன் தலையீடு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தமது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா போராளிகளை அவமதிக்கும் வகையில் ராம்தேவ் பேசியுள்ளார். அவர்தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

ராம்தேவ் மன்னிப்பு கோரினார்

ராம்தேவ் மன்னிப்பு கோரினார்

இந்நிலையில் ராம்தேவ் தமது ட்விட்டர் பக்கத்தில், ஹர்ஷ்வர்தனின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அலோபதி மருத்துவம் தொடர்பான என்னுடைய கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இதற்கான மன்னிப்பு கேட்கிறேன் என கூறியுள்ளார்.

English summary
'Yoga' Guuru Baba Ramdev tweets that I withdraw my comment and regrets.over Allopathy remark.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X