For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் சோதனை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கூட்டணி கட்சி அமைச்சர் கடும் பாய்ச்சல்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சக அமைச்சர் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச பாஜக அரசு கோவில்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறதே தவிர மக்கள் நலத் திட்டங்களில் அக்கறை செலுத்துவது இல்லை என உ.பி. அமைச்சரும் பாஜகவின் கூட்டணி கட்சியான சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான ராஜ்பார் சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் தங்களைப் போன்ற கூட்டணி கட்சியை பாஜக மேலிடம் மதிப்பதே இல்லை; எங்களை கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர்களை நிறுத்தினர்; கோரக்பூர் தொகுதியில் எங்களுக்கு 30,000 வாக்குகள் இருந்தது. அதை பயன்படுத்த பாஜக தவறிவிட்டது என ராஜ்பார் குற்றம்சாட்டியிருந்தார்.

Yogi too faces dissent from ally in UP

இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இது தொடர்பாக பேட்டியளித்த ராஜ்பார், யோகி ஆதித்யநாத் அரசு கோவில்களுக்குதான் முக்கியத்துவம் தருகிறது.

மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை தருவது இல்லை. ஏழை மக்கள் வாக்களித்துதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அந்த மக்களைப் பற்றி பாஜக அரசு கவலையேபடவில்லை.

நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறோம். ஆனால் பாஜகவோ கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க மறுக்கிறது.

இவ்வாறு ராஜ்பார் கூறினார்.

English summary
If on the one hand, the Bharatiya Janata Party (BJP) is facing the wrath of its alliance partners at the Centre, on the other, the saffron party is witnessing dissent by one of its allies in Uttar Pradesh. The BJP with its alliance partners are running coalition governments both at the Centre and in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X