For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைல் நதியில் படகு கவிழ்ந்து 19 சுற்றுலா பயணிகள் சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

கெய்ரோ: நைல் நதியில் படகு கவிழ்ந்து 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எகிப்து நாட்டில் புகழ் பெற்ற நைல் நதி உள்ளது. உலகின் மிக நீளமான நதி என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த நதியில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம். இதேபோல நேற்று இரவு படகு ஒன்றில் 30 சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் 19 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். எஞ்சியோரில் சிலர் காப்பாற்றப்பட்டனர். பலரை தேடும் பணி நடக்கிறது.

19 dead as boat capsizes in Nile

இத்தகவலை, எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஜிசா என்ற பகுதியின் அருகே இவ்விபத்து நடந்ததாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 16 ஆம்புலன்ஸ்கள், 2 மீட்பு படகுகள் மீட்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

English summary
At least 19 people were killed after a boat collided with a barge and capsized on the Nile river near here, Egypt’s interior ministry said in a statement on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X