21 வருடம் 66 நாட்களை கடந்து... புதிய கின்னஸ் சாதனை படைத்த சிஹுவாஹுவா வகை நாய்!
புளோரிடா: அமெரிக்காவைச் சேர்ந்த சிஹுவாஹுவா வகையை சேர்ந்த டோபிகீத் என்ற நாய் 21 வயது 66 நாட்களைக் கடந்து, அதிக நாட்கள் உயிர் வாழ்கின்ற நாய் என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.
Recommended Video
மனிதர்களோடு எப்போதும் நட்பாக பழகும் விலங்குகளில் முதன்மையானது நாய் தான். நன்றிக்குப் பேர் போன நாய்கள், சாதனைகளுக்கும் பெயர் பெற்றவை. உருவத்தை வைத்து, செயல்களை வைத்து எனப் பல பிரிவுகளில் பல நாய்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில் தற்போது, 21 ஆண்டுகள் 66 நாட்களைத் தாண்டி வாழ்ந்து வரும் நாய் ஒன்று, அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சிஹுவாஹுவா வகை நாய்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வாழும் இந்த டோபிகீத் (TobyKeith) நாயானது சிஹுவாஹுவா வகையைச் சேர்ந்தது. 2001-ம் ஆண்டு ஜனவரி 9 தேதி பிறந்த இந்த நாய்க்கு தற்போது 21 வயதாகிறது. இதன் உரிமையாளர் பெயர் க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவர். இவர் தனது செல்லப்பிராணி 21 வயதை கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியும், பெருமையும் கலந்து பதிவிட்டுள்ளார்.

21 வயது நாய்
பொதுவாக சிஹுவாஹுவா இன நாய்களின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 18 ஆண்டுகள் வரை மட்டுமே. ஆனால் கிசெலாவின் நாய் 21 வயது 66 நாட்களை கடந்து வாழ்ந்து வருகிறது. எனவே, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்ததோடு, ‘உலகின் மிகப் பழமையான நாய்' என்ற பெருமையும் அது பெற்றுள்ளது.

மென்மையான செல்லப்பிராணி
தனது நாயின் சாதனைப் பற்றி கிசெலா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பதிவில், "இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி. ஏற்கனவே இதனை வளர்ந்து வந்தவர்கள், தங்களுக்கு வயதாகி விட்டதால், இதனைப் பராமரிக்க இயலாமல் கஷ்டப்பட்டனர். எனவே அதனை நாங்கள் அதனை வாங்கினோம். அப்போது டோபிகீத்திற்கு 20 வயது என எங்களுக்குத் தெரியாது.

சிறிய மெய்க்காப்பாளர்
அதன் வயது தெரிந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டோம். டோபிகீத் எனது சிறிய மெய்க்காப்பாளர். எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்கிறார். நாங்கள் டிவி பார்க்கும்போது என் மீது படுத்துக்கொள்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். கூடவே கின்னஸ் அமைப்பின் பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தத் தகவல் வைரலானதைத் தொடர்ந்து, கிசெலாவின் நாயைப் பற்றிய வீடியோக்களை நெட்டிசன்கள் தேடிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

குவியும் லைக்குகள்
இதனால் கிசெலாவின் நாய் பற்றிய வீடியோக்கள் அதிக லைக்குகளைக் குவித்து வருகின்றன. கிசெலா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ மட்டும் சுமார் 17,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக உலகில் வயதான மனிதர்களைப் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் வைரலாகும். வித்தியாசமான தற்போது இந்த வயதான நாயைப் பற்றிய வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications