வங்கதேசத்தில் இந்துக்களின் 30 வீடுகள் தீக்கிரை- ஃபேஸ்புக் பதிவு வதந்தியால் விபரீதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தின் தாக்குர்பரா கிராமத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

தாக்குர்பரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் மதங்களுக்குள் இருக்கும் வேறுபாடு குறித்து பேஸ்புக்கில் எழுதியதாக ஒரு வதந்தி பரவியது. இந்த போஸ்ட் காரணமாக அப் பகுதியில் சிறிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

30 has set fire on houses of Hindus in Bangladesh

பின் போக போக அது இரண்டு கிராமங்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் அந்த கலவரம் மிகவும் பெரியதாக மாறியிருக்கிறது.

ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அந்த கிராமத்தை சுற்றி வளைத்து இருக்கின்றனர். யாரையும் ஊரை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். மேலும் அங்கு இருந்த வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கி உள்ளனர்.

இதில் 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். படுகாயம் அடைந்த ஒருவர் இன்று காலை மரணம் அடைந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A mob of protesters has set on fire nearly 30 houses of Hindus in Bangladesh. They did this followinga youth from the minority community published an offensive Facebook status about religions.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற