For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3,280 அடி ஆழத்தில் சிக்கிய 950 பணியாளர்கள்.. 2 நாளாக தென்னாப்பிரிக்காவில் தொடரும் உயிர் போராட்டம்

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் தங்க சுரங்கம் ஒன்றில் 950 பேர் வரை மாட்டி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    3,280 அடி ஆழத்தில் சிக்கிய 950 பணியாளர்கள்.. வீடியோ

    கேப்டவுன்: உலக தங்க உற்பத்தியில் தென்னாப்பிரிக்கா முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மிகவும் அதிக அளவில் தங்க உற்பத்தி செய்து வருகிறார்கள்.

    அதே சமயத்தில் அந்த நாடு பாதுகாப்பிற்கும் கேள்வி குறியான ஒன்று. இங்கு இருக்கும் பல சுரங்கங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

    அப்படிப்பட்ட சுரங்கம் ஒன்றில் 950க்கும் அதிகமான பணியாளர்கள் மாட்டி இருக்கிறார்கள். இவர்களை மீட்க போராட்டம் நடந்து வருகிறது.

    பல பணியாளர்கள்

    பல பணியாளர்கள்

    அங்கு இருக்கும் வெல்கம் டவுன் என்ற பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 3,280 அடி ஆழம் இருக்கும் சுரங்கத்தில் பணியாளர்கள் மாட்டி உள்ளனர். புதன் கிழமை இரவில் இருந்து பணியாளர்கள் மாட்டியுள்ளனர்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    புதன் கிழமை அங்கு புயல் வீசி இருக்கிறது. இதில் அந்த பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார வயர்கள் அறுந்துள்ளது. இதன் காரணமாக சுரங்கத்தில் இருந்து மேலே வரும் லிப்ட் வேலை செய்யாமல் பணியாளர்கள் மாட்டி இருக்கிறார்கள்.

    மிகவும் தாமதம்

    மிகவும் தாமதம்

    அங்கு இருக்கும் பணியாள்கள் ஒவ்வொரு நபராக மீட்கப்பட்டு வருகிறார்கள். ஒரே சமயத்தில் ஒருவருக்கு மேல் மீட்கப்பட முடியவில்லை. மின்சாரம் வரவும் நாளை வரை ஆகும் எனப்படுகிறது. இதனால் மீட்பு பணியில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

    பாதுகாப்பு இல்லை

    பாதுகாப்பு இல்லை

    அங்கு இருக்கும் யாருக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது தண்ணீரும், உணவும் வழங்கப்படுகிறது. ஆனால் எல்லோர்க்கும் தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கும் அளவு ஏற்பாடு செய்ய முடியவில்லை எனப்படுகிறது.

    பாதுகாப்பு இல்லை

    பாதுகாப்பு இல்லை

    அங்கு இருக்கும் யாருக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது தண்ணீரும், உணவும் வழங்கப்படுகிறது. ஆனால் எல்லோர்க்கும் தேவையான அளவு ஆக்சிஜன் வழங்கும் அளவு ஏற்பாடு செய்ய முடியவில்லை எனப்படுகிறது.

    650

    650

    கொஞ்சம் கொஞ்சமாக இதுவரை 650 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது என கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    950 Gold mining workers trapped underground in South Africa. Nearly 650 workers were rescued from the underground.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X