வசூல் ரோபோட் எம்பிபிஎஸ்... சீனாவில் டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்.. விரைவில் ஊசி போடும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ரோபோட் ஒன்று மருத்துவ தேர்வில் கலந்துகொண்டு டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக உலகிலேயே முதல்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட் என்ற பெருமையை அது பெற்று இருக்கிறது.

மேலும் அந்த ரோபோட் சீனாவில் இதுவரை மருத்துவ தேர்வில் மனிதர்கள் எடுத்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறது. இது அந்த நாட்டின் மருத்துவ துறையில் பெரிய சாதனையாகும்.

இந்த ரோபோட் இன்னும் சில காலத்துக்கு உதவியாளராக பணி புரிந்துவிட்டு பின் முழு நேர டாக்டராக பணிக்கு சேரும் என கூறப்பட்டுள்ளது.

 டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் iFlytek and Tsinghua Universit

டாக்டர் தேர்வில் பாஸ் ஆனா ரோபோட் iFlytek and Tsinghua Universit

சீன தலைநகர் பெய்ஜிங்கில் சில நாட்களுக்கு முன்பு நடந்த மருத்துவ தேர்வில் ரோபோ ஒன்று கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. சீனா அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த தேர்வில் ரோபோட் பங்கு பெற்றது. இது 'ஐ ஃப்ளை டெக்' மற்றும் 'சிங்குவா பல்கலைக்கழகம்' ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்ட்டது. மருத்துவ தேர்வில் மிகவும் சிறப்பாக எழுதிய அந்த ரோபோட் எளிதாக பாஸ் செய்தது.

 சாதாரணமாக நடைபெற்றது

சாதாரணமாக நடைபெற்றது

இதையடுத்து அந்த ரோபோட் நேர்முகதேர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. அந்த தேர்வில் அது இண்டர்நெட் உபயோகிக்க தடை செய்யப்பட்டு இருந்தது. ஆகவே அது மனிதர்களை போலவே தான் படித்து மனதில் இருக்கும் விஷயங்களை வைத்து பதில் கூறியது. கடினமான இந்த தேர்வை அது மனிதர்கள் போலவே எதிர்கொண்டது.

 ரோபோட் எடுத்த மதிப்பெண்

ரோபோட் எடுத்த மதிப்பெண்

இந்த நிலையில் சீனாவில் மருத்துவர் ஆவாதற்காக வரையறுக்கப்பட்டிருக்கும் 360 மதிப்பெண்களை விட அதிமாக எடுத்து பாஸ் ஆனது. அந்த ரோபோட் மொத்தமாக 456 மதிப்பெண்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மருத்துவ தேர்வில் எடுக்கப்பட்ட அதிகபட்ச மார்க் இதுவாகும். இதையடுத்து அந்த ரோபோட் மருத்துவ தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.

 டாக்டர் ரோபோட்

டாக்டர் ரோபோட்

சீனாவின் இந்த ரோபோட் தற்போது மருத்துவ பணிகளுக்கு சேர்க்கப்பட இருக்கிறது. அதன்படி முதலில் சில காலத்திற்கு பயிற்சி மருத்துவராக இருக்கும். அதன்பின் முழுநேர மருத்துவராக மாறும். இது இப்போதே 5,30,000 மக்களுக்கு சிறிய அளவில் மருத்துவம் பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாதத்தில் பெரிய ஆபரேஷன்கள் செய்ய அனுமதிக்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A robot in China got qualified as a Doctor for the first time in the world. It has scored 456 marks in Medical exam, which is the highest total ever in China medical history.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற