For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன, திபெத் எல்லையோர மலைப்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்

By Jeyarajaseker A
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனா மற்றும் திபெத்திய எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாமெட்டாங் கிராமத்திலிருந்து 70 கிலோமீட்டர் கிழக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் மையமானது, திபெத்தின் எல்லைப் பகுதியில் உள்ள சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

A shallow earthquake shakes Tibet and Chinese state

நிலநடுக்கத்தின் மையம் இருந்த பகுதியில்தான் புகழ் பெற்ற இரண்டு புத்தர் கோவில்கள் உள்ளன. இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் காயமடைந்ததாக அப்பகுதியின் கிராம நிர்வாகியான சம்பா என்பவர் தெரிவித்தார்.

சம்பவப் பகுதிக்கு மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை சேத விவரம் தெரியவில்லை.

English summary
A shallow earthquake was reported in the border of Tibet and Chinese state and no details were known about the damages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X