For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுங்கிக்கொண்டே இருக்கும் செபலோனியா... கிரேக்கத் தீவில் தொடரும் நிலநடுக்கம்..

Google Oneindia Tamil News

ஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே, லோனியன் கடலில் உள்ள தீவான செபலோனியாவில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை அமெரிக்க புவியியல் கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு காலை 5.08 மணி அளவில் ஏற்பட்டது. இதன் மையமானது, ஏதென்ஸுக்கு மேற்கில் உள்ள லிக்சரியன் என்ற இடத்தில் இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. இதேபோன்று 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இப்பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் ஏதென்ஸை சுற்றியுள்ள பல தீவுகளில் உணரப்பட்டது. ஐரோப்பாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் கிரீஸும் ஒன்று.

செபலோனியா இதற்கு முன்பு பல சமயங்களில் நிலநடுக்கங்களை சந்தித்துள்ள போதும் 1953ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அத்தீவில் உள்ள அனைத்து வீடுகளும் மிகமிக கடுமையான நிலநடுக்கத்தால் தரைமட்டமானது.

கேப்டன் கொரெலினின் மிகப் பிரபலமான "மாண்டோலின்" என்ற நாவலில் இத்தீவு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது. 2001ஆம் ஆண்டில் இந்நாவல் இதே பெயரில் நிக்கோலஸ் கேஜ் நடிப்பில் இத்தீவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
A strong 6.1 magnitude earthquake struck near the Greek island of Cephalonia in the Ionian Sea early on Monday, the the US Geological Survey. The quake hit at 5:08am (0308 GMT) with its epicentre just 12 kilometres (7 miles) from the town of Lixourion, 300 kilometres west of Athens, the USGS said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X