யாருன்னு பாருங்க.. கையில் ராக்கெட் லாஞ்சர்களுடன் படகில் தாலிபான்கள் ஆட்டம்.. பசியால் கதறும் மக்கள்
தாலிபான்கள் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது
காபூல்: தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், பூங்காக்களில் விளையாடி கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
ஆப்கனில் புதிய ஆட்சியை நிறுவியும்கூட, பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் தராமல் இருக்கிறார்கள்.. கல்வி, வேலைவாய்ப்பில், பெண்களுக்கான உரிமைகளையும் தாலிபான்கள் மறுத்துள்ளனர்... ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்..
பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. திரைச்சீலை உதவியுடன் தனியாக பிரித்து உட்கார வைப்படுகின்றனர்.. இதனால் அச்சம் கொண்ட பெண்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

7 தாலிபான்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான், தாலிபான்களின் ஒரு வீடியோ 2 நாளைக்கு முன்பு வெளியானது.. அர்கந்தாப் என்ற ஆற்றங்கரையில் தாலிபான்கள் டான்ஸ் ஆடும் வீடியோ அது.. பின்னணியில் அவர்களின் தேசபக்தி பாட்டு ஒலிக்கிறது, அப்போது, 7 தாலிபான்கள் ஒன்றாக சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள். 1996 முதல் 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில், இசைக்கும் தடை, நடனத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இப்போதைக்கு அவர்கள் தேசபக்தி பாட்டுக்கு டான்ஸ் ஆடும் அளவுக்கு வந்துள்ளது அனைவருக்கும் வியப்பை தந்தது.

பூங்காக்கள்
இப்போது இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தாலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காவில் ஜாலியாக விளையாடி கொண்டிருக்கிறார்கள்.. ஏ.கே 47, எம் 4 மற்றும் ராக்கெட் லாஞ்சர்களுடன் கேஷூவலாக அவர்கள் அந்த பூங்காக்களில் சுற்றி கொண்டிருக்கிறார்கள்.. அந்த ஏரியில் படகு சவாரி செய்தும், ராட்டினங்களிலும் சுற்றி வந்து தீவிரவாதிகள் விளையாடுகிறார்கள்.. மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்கிறார்கள்.

பசி கொடுமை
தாலிபான்களின் இந்த செயல் சொந்த நாட்டு மக்களை இழிவுபடுத்துவதை போல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.காரணம், அந்த நாட்டில் மக்கள் பசி கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.. ஏற்கனவே அங்கு பொருளாதாரசூழல் மோசமான நிலைமையில் உள்ளது.. பணவீக்கமும் அதிகரித்து வருகிறது.. அந்த நாட்டின் கரன்சி மதிப்பும் சரிந்து வருகிறது... மக்களுக்கு வேலை இல்லை.. கையில் பணமும் இல்லை..
Recommended Video

நியாயமா?
வெறும் 5 சதவீத குடும்பங்களிடம் மட்டுமே தினமும் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் ஏற்கனவே வார்னிங் தந்திருந்தது... இவ்வளவு இருந்தும், எதை பற்றியும் கவலைப்படாமல் தாலிபான்கள் பூங்காக்களில் விளையாடிகொண்டிருப்பது பெரும் கவலை இவர்கள் மட்டும் இவ்வளவு ஜாலியாக இருக்கிறார்களே, பெண்களின் உரிமைகளை பெறுவதற்கு ஒரு வழியை செய்யக்கூடாதா? அவர்களின் உரிமைகளை மறுத்து வருவது நியாயமா? என்று தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications