தாலிபான்கள் என்னை படுகொலை செய்ய வருவார்கள்.. வெயிட்டிங்... அதிரவைக்கும் ஆப்கான் முதல் பெண் மேயர்!
காபூல்: ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் என்ற பெருமை பெற்ற Zarifa Ghafari - ஜரீபா கபாரி அளித்திருக்கும் பேட்டி உலகை அதிர வைத்துள்ளது. அரசியலில் ஈடுபட்டதால் தாலிபான்கள் என்னை படுகொலை செய்ய வருவார்கள்.. நானும் எனது குடும்பமும் காத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார் ஜரீபா கபாரி.
Recommended Video
தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தனர். அப்போது பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. பொதுவாக டிவி, இசை, சினிமா என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டன.
பெண்களைப் பொறுத்தவரை வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டியவர்கள் என்கிற கோட்பாட்டில் தாலிபான்கள் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். இதனால் தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மிக கொடூரமான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர்.

உலக நாடுகளும் மலாலாவும்
2001-ல் தாலிபான்கள் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் படிப்படியாக பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டன. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல்கள், படுகொலைகளை தாலிபான்கள் நிகழ்த்தி வந்தனர். அப்படியான ஒடுக்குமுறைகளுக்கு உலக சாட்சியாக இருப்பவர் மலாலா. தாலிபான்கள் தடையை மீறி கல்வி கற்க சென்றதால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி உயிர் தப்பியவர் மலாலா.

ஆப்கானின் முதல் பெண் மேயர்
மலாலாவைப் போல உலகம் அறியாத இன்னொரு பெண் ஆப்கானிஸ்தானிலேயே உண்டு. அவர்பெயர்தான் ஜரீபா கபாரி. அவருக்கு வயது 27. 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் வார்தாக் மாகாணத்தில் மைதான் சாகர் நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர் ஜரீபா. தலிபான்களின் டார்கெட்டில் ஜரீபாவும் இருந்தார். இருந்து வருகிறார்.

தாலிபான்கள் ஹிட் லிஸ்ட்டில்..
ஜரீபாவை படுகொலை செய்ய ஏற்கனவே 3 முறை தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால் தாலிபான்கள் முயற்சிகள் தோல்வியைத்தான் தழுவின. ஜரீபாவின் தந்தையான முன்னாள் ராணுவ அதிகாரி வாசிம் கபாரியையும் கடந்த ஆண்டு சுட்டுப் படுகொலை செய்தனர் தாலிபான்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசமாகி உள்ளது.

பெண் உரிமையை பாதுகாப்போம்
தாலிபான்களின் காட்டாட்சியில் பெண்கள் நிலைமை என்னவாகுமோ என ஐநா பாதுகாப்பு கவுன்சில் தொடங்கி உலக நாடுகள் அனைத்தும் பதைபதைப்புடன் இருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்காக விமான நிலையத்திலேயே முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் தாலிபான்கள் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பெண்களுக்கான உரிமையை நாங்கள் இஸ்லாமிய சட்டங்களுக்குட்பட்ட வகையில் அனுமதிப்போம். பெண்கள் அச்சப்பட தேவை இல்லை என கூறியிருக்கின்றனர். இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் முதல் பெண் மேயரான ஜரீபா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டிதான் இப்போது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

என்னை கொல்ல வருவார்கள்.. வெயிட்டிங்
ஜரீபா கபாரி அளித்திருக்கும் பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது: தாலிபான்கள் வருவார்கள்.. என்னை படுகொலை செய்வார்கள் என்பதற்காக நான் காத்திருக்கிறேன். எங்கள் குடும்பத்துக்கு உதவுவதற்கு இப்போது யாரும் இல்லை. என் கணவர் உட்பட குடும்பத்தினருடன் இங்குதான் இருக்கிறேன். என்னால் என் குடும்பத்தினரை விட்டு சென்றுவிட முடியாது. தாலிபான்கள் எங்களைத் தேடி வந்து கொலை செய்வார்கள். அதற்காக நான் இந்த தேசத்தைவிட்டு தப்பி ஓட முடியாது. அப்படி எங்குதான் தப்பி போவது? என்கிறார். அன்று மலாலா! இன்று ஜரீபா கபாரி!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications