'அதிசயம்.. ஆனால் உண்மை'.. நேரடியாக மின்னல் தாக்கி உயிர்பிழைத்த தொழிலாளி.. இந்த வீடியோவை பாருங்க!
ஜகார்த்தா: ஒரு மனிதனுக்கு இறப்பு என்பது எந்த நேரத்திலும் நிகழலாம். இறப்பை தீர்மானிக்கும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனாலும் விதியையே சாகடித்து கடைசி நேரத்தில் இறப்பை வெற்றி கொண்டு வாழும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்குதான் வாய்க்கும்.
Recommended Video
இந்த வகையில் உலகமே அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த ஒரு நபரை பற்றிதான் பார்க்க போகிறோம். இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரின் வடகிழக்கு பகுதியில் கனரக இயந்திரங்களை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

மின்னல் தாக்கியது
கடந்த வாரம் இங்கு விறுவிறுப்பாக பணிகள் நடந்து கொண்டிருக்க இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. அப்போது கையில் குடையுடன் நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க தொழிலாளி மீது திடீரென படு பயங்கர மின்னல் தாக்கியது. இதனால் அவர் தரையில் விழுந்ததும் சக ஊழியர்கள் உடனடியாக விரைந்து சென்றனர்,

உயிர் பிழைத்த அதிசயம்
பயங்கர மின்னல் தாக்கிய போதிலும் தொழிலாளி உடலில் உயிர் இருப்பதை கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் கிடந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற தொழிலாளி தற்போது வீட்டில் முழுமையாக குணமடைந்து வருகிறார்.

பதைபதைக்க வைக்கும் வீடியோ
'மின்னல் விழுந்து பனை மரம் தீப்பிடித்து முற்றிலுமாக கருகியது'' என்ற செய்தியை நாம் அடிக்கடி பார்த்து இருப்போம். இப்படி மரமே முழுமையாக சாம்பலாகும் நிலையில், மின்னல் தாக்கி தொழிலாளி உயிர் பிழைத்தது ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்தாலும், தொழிலாளி மீது மின்னல் தாக்கும் வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.

எப்படி உயிர் பிழைத்தார்?
இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ''இந்த மனிதர் எப்படி உயிர் பிழைத்தார்?'' என்ற கேள்வி கண்டிப்பாக மனதில் வந்து போகும். நிறுவனத்தின் உள்ளே அந்த தொழிலாளி குடை பிடித்தபடி நடந்து செல்லும்போது, மின்னல் தாக்குவதையும், அப்போது கடும் தீப்பொறிகள் பறப்பது போலவும் வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.

100 வயது வரை வாழணும்
தொழிலாளி கையில் வைத்திருந்த வாக்கி-டாக்கி மின்னலை ஈர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும்., குடையை எடுத்துச் சென்றதும் மின்னல் தாக்கும் வாய்ப்புகளை அதிகரித்திருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். 'இந்த மனிதர் மிகவும் அதிர்ஷ்டகாரர்.. இவர் 100 வயது வரை வாழ வேண்டும்' என்று வீடியோவுக்கு கீழே பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications