ஜெர்மனியின் முனிச் ரயில்வே ஸ்டேஷனில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகர் ரயில்வே ஸ்டேஷனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியின் முனிச் நகர் ரயில்வே ஸ்டேஷனில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். திடீரென கண்ணில் பட்டவர்களையெல்லாம் அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

An unidentified man opened fire at a train station in Munich, Germany

இதில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

ரயில் நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போலீசார் காயமடைந்தவர்கைளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் இந்த தாக்குதலில் பெண் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதலா என சந்தேகிக்கப்படுகிறது. ரயில்வே நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டால் முனிச் நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Several people were injured when an unidentified assailant opened fire at a train station in Munich, Germany, as reported by AFP. A policewoman was also injured in the attack
Please Wait while comments are loading...