For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஸா பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்துக்கும் மேற்பட்டோர் பலி

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெருசலேம்: காஸாவின் தெற்கு பகுதியில் செயல்படும் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

At least 10 killed in strike on UN school in Gaza

காஸா மற்றும் இஸ்ரேல் நடுவே கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், இஸ்ரேல் இன்று காஸாவின் தெற்கு பகுதி நகரமான ரஃபாவிலுள்ள பள்ளி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. போரினால் உற்றார் உறவினர்களை இழந்த குழந்தைகள் படிக்க ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பள்ளி இதுவாகும்.

இந்த தாக்குதலில் சிறுவர், சிறுமிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களில் பாலஸ்தீனத்தில் செயல்படும் ஐநா பள்ளிகள் மீது நடத்தப்பட்ட 3வது மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். வடக்கு பாலஸ்தீனத்தின் ஜபாலியா நகரில் நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிருப்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தது நினைவு கூறத்தக்கது.

English summary
At least 10 people were killed Sunday in a fresh strike on a UN school in southern Gaza which was sheltering Palestinians displaced by an Israeli military offensive, medics said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X