For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலைகார சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: ஈழத் தமிழர்களுக்கு பகிரங்கமாக கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த இங்கிலாந்து எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கை சுதந்திர தின விழாவை புறக்கணித்து லண்டனில் ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது.

British MPs urge to deport of Sri Lankan Officer

அப்போது இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள பெர்னாண்டோ வெளியே வந்து ஈழத் தமிழர்களைப் பார்த்து சைகையால் கழுத்தை அறுப்பேன் என மிரட்டினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையானது.

இதனால் இலங்கை அரசு பெர்னாண்டோவை முதலில் சஸ்பென்ட் செய்தது. ஆனால் அதிபர் மைத்ரிபால சிறிசேன இதனை ரத்து செய்தார். இதுவும் சர்ச்சையாகி உள்ளது.

இதனிடையே சிங்கள ராணுவ அதிகாரியை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
British MPs had urged the UK Govt to deport the Srilankan Military Officer who filmed making a throat slitting gesture to Eelam Tamils in London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X