For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... 'டூம்ஸ்டே' கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப் போர் உள்ளிட்ட அழிவுப் பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

நியூயார்க் : பருவநிலை மாற்றம், இந்தியா பாகிஸ்தான் இடையிலான மாற்றங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப் போர் உள்ளிட்ட அழிவுகளை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக அழிவை குறிக்கும் வகையில் டூம்ஸ் டே கடிகாரத்தில் ஊழிகாலத்தை 2 நிமிடங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்ற அழைக்கப்படும் டூம்ஸ்டே கிளாக் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச் சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வருகின்றனர்.

1947ம் ஆண்டில் டூம்ஸ் டே கிளாக் அமைக்கப்பட்ட போது ஊழி காலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அது 2 நிமிடங்கள் மட்டுமே ஊழி காலத்திற்கு இருப்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் உலகப் பிரச்னைகள்

அச்சுறுத்தும் உலகப் பிரச்னைகள்

தென்சீனக்கடல் பற்றிய பதற்றங்கள், பருவநிலை மாற்றங்கள், இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல்களை விஞ்ஞானிகள் அழிவுகளாக சுட்டிக் காட்டியுள்ளனர். ரஷ்யா, அமெரிக்கா, வடகொரியா மற்றும் சீனா இடையேயான பிரச்னைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

அணுஆயுத போரால் அழிவு

அணுஆயுத போரால் அழிவு

வடகொரியா அணுஅயுத ஏவுகணை சோதனையால் அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டுகிறது. அணுஆயுத போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விஞ்ஞானிகள் ஆலோசனை

விஞ்ஞானிகள் ஆலோசனை

உலக அழிவில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்யலாம் என்று விஞ்ஞானிகள் குழு சில ஆலோசனைகளையும் தந்துள்ளது இதன் படி. பதற்றமான சூழலை தவிர்க்க ட்ரம்ப் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

அமெரிக்கா, ரஷ்யா அமைதிப்பேச்சு

நிர்வாக ரீதியிலான நடவடிக்கை தவிர வேறு வழியிலான கம்யூனிகேஷன் முறைக்கு அமெரிக்க அரசு வழி வகுக்க வேண்டும். ஈரான் விவகாரத்தில் நாடகப் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா அமைதிப் பேச்சு நடத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்.

English summary
Bulletin of the Atomic Scientists pushed the Doomsday Clock forward to two minutes symbolises world is moving towards the danger because of nuclear weapons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X