For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹார்வர்ட் பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு சிகாகோ தமிழ்ச் சங்கம் 35 ஆயிரம் டாலர் நிதி!

By Shankar
Google Oneindia Tamil News

சிகாகோ(யு.எஸ்): சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் , ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு 35 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ( தமிழ்த்துறை) அமைப்பதற்கு 6 மில்லியன் டாலர்கள் நிதி வழங்க வேண்டியதுள்ளது. டாக்டர் சம்பந்தம் மற்றும் டாக்டர் ஜானகிராமன் ஆகிய இருவரும் தலா 500 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கி 1 மில்லியன் டாலருடன், இதற்கான முயற்சியை கடந்த ஆண்டு ஃபெட்னா விழாவில் அறிவித்தனர்.

Chicago Tamil Sangam donates $35K to Harvard Tamil Chair

அதைத் தொடர்ந்து உலகத் தமிழர்களிடம் மீதி தொகையை நன்கொடையாக திரட்ட முடிவு செய்து Harvard Tamil Chair என்ற லாப நோக்கமற்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களிலும் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது.

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இசை நிகழ்ச்சி

சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் இசை விழா நடத்தி அதன் மூலம் 35 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கப்பட்டது.

Chicago Tamil Sangam donates $35K to Harvard Tamil Chair

VSharp இசைக் குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சியில் பின்னணி பாடகி ரோஷிணி மற்றும் சூப்பர் சிங்கர்கள் ஹரிஹரசுதன், ஜெசிக்கா, அர்ஜூன் ஆகியோர் பங்கேற்றனர். உடன் ஸ்வேதா, வர்ஷா மற்றும் நிகிதா வின் நடனங்களும் இடம்பெற்றன.

வரதீஷ், பிரேமானந்த், நம்பிராஜன், ஜெயஸ்ரீ, ராஜேஷ், ரகுராம், ரவிசங்கர் ஆகியோர் பல்வேறு குழுக்களாக நிகழ்ச்சி இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

35ஆயிரம் நன்கொடை

Chicago Tamil Sangam donates $35K to Harvard Tamil Chair

நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட 35 ஆயிரம் டாலர்களுக்கான காசோலையை முன்னாள் தலைவர் சாக்ரட்டீஸ் வழங்க டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் பெற்றுக்கொண்டனர்.

மேலும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியாகும் பலகை இதழை மாணிக்கம் வெளியிட டாக்டர் ஜானகிராமன் பெற்றுக்க்கொண்டார்.

அமெரிக்கா முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளார்கள்.

விரைவிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைந்து, பல புதிய தமிழ் ஆராய்ச்சிகள் தொடங்கும் என நம்பலாம்.

ஒன்இந்தியா...

ஹார்வர்ட் பல்கலைக் கழக தமிழ் இருக்கை அமைவது குறித்த செய்தியை, ஃபெட்னா 2015 விழாவில் அறிவித்த உடனேயே, உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்ததே ஒன் இந்தியா தமிழ் இணைய தளம்தான் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறோம்.

அது தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் வாசகர்களுக்கு ஒன் இந்தியா தமிழ் தொடர்ந்து வழங்கி வருகிறது. நிதி திரட்டுவதற்கான முயற்சிகளுக்கும் தொடர்ந்து துணை நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-இர தினகர்

English summary
The Chicago Tamil Sangam has donated 35,000 US Dollars for setting up the The Tamil Chair in Harvard University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X