For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரல் மாதம் முதல் லடாக் எல்லையில் என்ன நடந்தது.. விரிவான அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கால்வன் பள்ளத்தாக்கு தங்கள் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் இந்திய- சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளது.

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய- சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். சமரசம் செய்து கொள்வதாக பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்ட நிலையில் இந்த மோதல் சம்பவத்தால் போர் மூளும் சூழல் நிலவி வந்தது.

சுகோய், மிராஜ்.. தயார் நிலையில் அதிநவீன போர் விமானங்கள்.. காஷ்மீரில் விமானப் படை தளபதி திடீர் ஆய்வு சுகோய், மிராஜ்.. தயார் நிலையில் அதிநவீன போர் விமானங்கள்.. காஷ்மீரில் விமானப் படை தளபதி திடீர் ஆய்வு

அதிகாரப்பூர்வம்

இந்த நிலையில் லடாக் மோதல் குறித்து விளக்கமளிக்க சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லீ ஜீயன் செய்தியாளர்களை சந்தித்தார். இதுகுறித்து இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிக்கை வெளியானது.

சாலைகள்

சாலைகள்

அதில் கால்வன் பள்ளத்தாக்கு உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் சீன பகுதியில் அமைந்துள்ளது. சீனாவை சேர்ந்த பாதுகாப்பு படையினர் பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதற்கொண்டு இந்திய ராணுவதத்தினர் கால்வன் பள்ளத்தாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சாலைகளை அமைத்து வருகிறார்கள்.

தடுப்பு வேலிகள்

தடுப்பு வேலிகள்

இதற்கு நாங்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இந்த அதை கண்டுகொள்ளாமல் எல்லையை கடந்து சீனாவை வெறுப்பேற்றும் செயலில் ஈடுபட்டது. மே 6-ஆம் தேதி இரவு இந்திய ராணுவத்தினர் எல்லையை தாண்டி சீன எல்லைக்குள் நுழைந்து தடுப்பு வேலிகளை அமைத்து சீன படையினர் ரோந்து மேற்கொள்வதற்கு தடையாக இருந்தனர்.

எல்லை

எல்லை

இந்த நிலையை சரி செய்ய இந்தியா- சீனா இடையே ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. சீனாவின் வலுவான உரிமைக் கோரல் மூலம் எல்லை தாண்டிய இந்திய வீரர்களை திரும்பப் பெற சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய வீரர்கள் தடுப்பு வேலிகளை நீக்கிவிட்டு தங்கள் எல்லைக்குள் சென்றுவிட்டனர்.

இந்திய ராணுவம்

இந்திய ராணுவம்

இதையடுத்து ஜூன் 6-ஆம் தேதி இரு தரப்பினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. கால்வன் ஆற்றை கடந்து சாலைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை அமைக்க மாட்டோம் என இந்திய ராணுவம் உறுதி அளித்தது. இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜூன் 15-ஆம் தேதி இந்திய ராணுவத்தினர் ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டினர்.

வழிவகுத்தது

வழிவகுத்தது

தங்கள் எல்லையிலிருந்து திரும்பிச் செல்லுமாறு கூறிய சீன அதிகாரிகள் மற்றும் வீரர்களை இந்திய வீரர்கள் தாக்கினர். இந்த கைகலப்பில் சிலர் காயமடைந்தனர். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா வேண்டுமென்றே ஒரு தலைப்பட்சமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் செயல்பட்டது. இதனாலேயே சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது. இதனால் வீரர்கள் இறக்கவும் காயமடையவும் வழிவகுத்தது.

நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் எல்லைப் பகுதிகளின் நிலைத்தன்மையை குறைத்து மதிப்பிட உட்படுத்தியுள்ளது. இரு நாடுகளின் ஒப்பந்தத்தை மீறி சீன வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டது. இது தொடர்பாக இந்தியாவிடம் சீனா தெரிவித்தது.

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

இந்த நிலையில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேசிய போது இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் சீன அமைச்சர் தெரிவித்தார்.

எல்லை பகுதி

எல்லை பகுதி

கள நிலவரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவர். அப்போது நிலைமையை தணிந்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சீனாவுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என நம்புகிறோம். 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாட்டு அதிகாரிகளிடையே ஏற்படும் கருத்தொற்றுமையை உண்மையாக இந்தியா பின்பற்றும் என்றும் நம்புகிறோம். எல்லை பகுதிகளில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ இரு நாடுகளும் உறுதி செய்வோம் என்றார்.

Recommended Video

    China India Border Satellite images - சீனாவின் புதிய சதித்திட்டம் அம்பலமானது

    English summary
    China claims that Galwan Valley on its side of LAC
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X