For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டுக்கறி பர்கர் சாப்பிடப் போய் மாட்டிக் கொண்ட சோட்டா ராஜன்!

Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேசியாவில் மாட்டுக்கறி பர்கர் சாப்பிடப் போய் சோட்டா ராஜன் மாட்டிக் கொண்டார் என்கிற சுவாரசிய தகவ வெளியாகியுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய போலீசார் மற்றும் உளவுத்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு, தலைமறைவு வாழ்க்கை வந்தவர் சோட்டா ராஜன். இவர் இந்தோனேசியவில் சிக்கியுள்ளார்.

சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் பிடிபட்டது எப்படி என்பது தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரியான அனிருத் ஷர்மா விவரித்துள்ளார்.

பர்கர் சாப்பிட்டும் சோட்டா ராஜன்:

பர்கர் சாப்பிட்டும் சோட்டா ராஜன்:

"சோட்டா ராஜன் பாலி விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல கே.எப்.சி உணவகத்தில் பிக் டாடி எனப்படும் மாட்டிறைச்சி பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக எங்களுக்கு சோட்டா ஷகில் கும்பலிடம் இருந்து ரகசிய தகவல் வந்தது.

நான் கக்கூஸ்லதான் இருக்கேன்:

நான் கக்கூஸ்லதான் இருக்கேன்:

உடனடியாக மைக் ஆண்டர்சன் என்ற இன்டர்போல் போலீஸ் அதிகாரியை நாங்கள் தொடர்புகொண்டு தகவலை பரிமாறினோம். அதிர்ஷ்டவசமாக, அதே கே.எப்.சி உணவகத்தின் கழிப்பறைக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூர்ச் சட்டப்படி கைது:

உள்ளூர்ச் சட்டப்படி கைது:

இந்தோனேசியாவில் என்ன குற்றச்சாட்டின் கீழ் சோட்டா ராஜனை கைது செய்வது என யோசித்தபோது போலீஸ் சட்டப்பிரிவு 302.5 இன் கீழ் உள்ளூர் போலீசாரை வைத்து முதலில் அவரை கைது செய்தோம்.

இன்டர்போல் கஸ்டடி:

இன்டர்போல் கஸ்டடி:

பின்னர், அவரை இன்டர்போல் கஸ்ட்டடியில் எடுத்து, இதுதொடர்பாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் அளித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

சாப்பிட்டது தப்புதான்:

சாப்பிட்டது தப்புதான்:

கைதானபோது கே.எப்.சி உணவக வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோட்டா ராஜன், "என் வாழக்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு மாட்டுக்கறி பர்கர் சாப்பிட்டதுதான். அதைவிட நான் சிக்கன் டிக்கா ஆர்டர் செய்திருக்கலாம்" என தெரிவித்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Chota Rajan, the underworld don, who was involved in multiple serial blasts, has finally got arrested for eating beef in KFC in Indonesia. Apparently, the arrest was triggered after intelligence sources received a tip-off that the Don was at a fast food outlet and having something that would make a strong case for him to be arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X