For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீச்சீ.. இதெல்லாமா சாப்பிடுவாங்க.. அதுவும் 3 நாள் சுடுநீரில் ஊற வைத்து.. மிரள வைக்கும் "கொஞ்ச் சோர்"

ஜப்பானில் கரப்பான் பூச்சி பீருக்கு மவுசு நாளுக்கு நாள் எகிறி வருகிறது

Google Oneindia Tamil News

டோக்கியோ: வடிவேலுவின் 23-ம் புலிகேசி படத்தில், மதுபானம் தயாரிக்க முயலை எடுத்து 3 நாள் தண்ணீரில் ஊற வைப்பாங்களே.. அதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், முயலுக்கு பதில் கரப்பான்பூச்சி..!

இறைச்சி வகைகளில் பெரும்பாலும் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன்கள், உட்பட பல விலங்குகளும், பறவைகளும், கால்நடைகளும் உண்டு.. ஆனால் பூச்சியினங்களை அவ்வளவாக உட்கொண்டதாக தெரியவில்லை..

ஈசல் போன்ற பூச்சிகளை உடல் ஆரோக்கியத்துக்காக நம் தமிழகத்திலேயே பயன்படுத்தி வருவது தெரிந்த விஷயம்தான் என்றாலும், கரப்பான்பூச்சியை நாம் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை.

தம்மாத்துண்டு கரப்பான்பூச்சிக்கே ஊரை கூட்றோமே.. இந்தா பாருங்க!.. ராட்சத கரப்பான்பூச்சி கண்டுபிடிப்புதம்மாத்துண்டு கரப்பான்பூச்சிக்கே ஊரை கூட்றோமே.. இந்தா பாருங்க!.. ராட்சத கரப்பான்பூச்சி கண்டுபிடிப்பு

விருப்பம்

விருப்பம்

ஆனால், கரப்பான்பூச்சியை ஆசை ஆசையாக சாப்பிடுகிறது தைவான் நாடு... அதிலும் கரப்பான் பூச்சி பீர் என்றால் கொள்ளை பிரியமாம் இந்த நாட்டுக்காரர்களுக்கு.. நமக்குதான் இதை கேட்கும்போது குமட்டலாக வருகிறது.. எனினும், இந்த கரப்பான் பூச்சி பீர் என்றாலே தைவான்காரர்களிடம் ஒருவித டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கிறது.

கசப்பு

கசப்பு

இதற்கு "கபுடோகாமா" அல்லது "கொஞ்ச் சோர்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.. இதில் சோர் என்பது ஆங்கிலத்தில் கசப்பை குறிக்கும்.. கொஞ்ச் என்ற ஜப்பான் வார்த்தையுடன், சோர் என்ற ஆங்கில வார்த்தையை சேர்த்து இப்படி அழைக்கிறார்கள்.. ஜப்பானில் தயாராகிறது இந்த பானம்.. தைவான் நாட்டு கரப்பான்பூச்சிதான் இந்த பீர் தயாரிக்க செம டேஸ்ட்டாக இருக்குமாம்.

நன்னீர்

நன்னீர்

அப்படியே இறால் மீன் டேஸ்ட் இந்த கரப்பான்பூச்சியில் கிடைக்குமாம்.. அதனால், கரப்பான்பூச்சி சூப் வைத்து குடிப்பார்களாம். இந்த கரப்பான் பூச்சி பீர் விலை நம்ம ஊர் மதிப்புபடி ரூ.450 ரூபாய்.. இந்த பீரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? முதலில் நன்னீரில் உள்ள கரப்பான் பூச்சிகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள்.. இந்த வகை கரப்பான் பூச்சிகள் தண்ணீரில் வாழும்.. இதை மீன்களுக்கு உணவாக பயன்படுத்துகிறார்கள்.

Recommended Video

    தண்ணீரில் ஊறவைத்து பரோட்டா சுடுவது எப்படி | வைரலாகும் பரோட்டா மாஸ்டரின் குறும்புபடம்
    பாரம்பரியம்

    பாரம்பரியம்

    இந்த வகை கரப்பான்பூச்சிகளை பிடித்து வந்து, சுடுதண்ணீரில் 3 நாள் வேக வைப்பார்களாம்.. 3 முதல் 4 நாட்கள் சுடுநீரிலேயே வைத்திருந்தால், அதில் இருந்து சாறு வரும்.. அந்த சாறை தனியாக எடுத்து, பீர் செய்ய பயன்படுத்துகிறார்கள்... 20ம் நூற்றாண்டின் முன்பகுதியில் இருந்தே இந்த பீரை ஜப்பானியர்கள் குடித்து வருகிறார்களாம்... அதனால்தான் இன்றுவரை இந்த பீரின் மவுசு குறையாமல் உள்ளது.

    English summary
    CockRoach Beer: Do you know "kabutokama", this cockroach beer is famous in Taiwan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X