உலகம் முழுவதும் கொரோனாவால் 8,431 பேர் மரணம் பிரேசில் நாட்டில் 2,127 பேர் பலி
கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் ஒரே நாளில் 8,431 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 2,127 பேர் பலியாகியுள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. ஒரே நாளில் 8,431 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 2,127 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யா, அர்ஜென்டினா, கொலம்பியா நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி உலக அளவில் 8,431 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர்.

இதில் பிரேசில் நாட்டில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,127 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பிரேசில் நாட்டில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 518,246 பேராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,20,223 பேராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 991 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,99,475 பேராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா, அர்ஜென்டினா, கொலம்பியா நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் ஒரே நாளில் 669 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் பலி எண்ணிக்கை 1,35,214 பேராக உயர்ந்துள்ளது. இதே போல அர்ஜென்டினாவில் 636 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 94,304 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொலம்பியா நாட்டில் 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 1,06,544 பேராக உயர்ந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications