For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது- வாழ பழக வேண்டும்- கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: மனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது; அதனுடன் வாழ பழகுவது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Recommended Video

    WHO Says, We Will Have To Learn To Live With Coronavirus

    இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாவது:

    கொரோனா வைரஸை உலகத்தில் இருந்து நாம் அடியோடு அழித்துவிட முடியாது. அது எப்போது நம்மிடமிருந்து விலகி மறையும் என்பதை கணிக்கவும் முடியாது.

    Coronavirus may never go away: WHO

    ஆட்கொல்லி வைரஸான ஹெ.ஐ.வி. போல கொரோனாவும் உயிர்ப்புடன் நம்முடனேயே இருக்கும். கொரோனா வைரஸ் என்பது நீண்டகாலத்துக்கு பிரச்சனையை ஏற்படுத்தவும் செய்யலாம்.

    அதேநேரத்தில் கொரோனாவால் நீண்டகாலம் பிரச்சனை வராமலும் போகலாம். ஆனால் கொரோனா எப்போது அழியும் என்பதை யாராலும் முன்னரே கூறிவிட முடியாது.

    Coronavirus may never go away: WHO

    தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் இருக்கும் சூழ்நிலையில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

    Coronavirus may never go away: WHO

    இந்த மருந்துகள் சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் கொரோனாவுக்கு எதிரான வலிமையான மருந்து இதுதான் என ஒன்றை சுட்டிக்காட்டி உறுதி செய்வது கடினமாக உள்ளது. இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78, 055; உயிரிழப்புகள் 2,551 ஆக அதிகரிப்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78, 055; உயிரிழப்புகள் 2,551 ஆக அதிகரிப்பு

    English summary
    World Health Organization (WHO) said that the coronavirus could become endemic in the same way as HIV and populations around the world will have to learn to live with it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X