Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகமெடுத்த கொரோனா.. மாற்று மருந்துகளால் கொத்துகொத்தாக பலியாகும் மக்கள்.. திணறும் சீனா.. சோகம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்படும் நிலையில் அவர்கள் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைவதாகவும், ஏராளமான முதியவர்கள் தற்கொலை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019 இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு 2020ல் சுமார் 150க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

தினமும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக ஏராளமானவர்கள் மரணமடைந்தனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் பல லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, பல ஆயிரம் பேர் பலியாகினர்.

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்

ஒட்டுமொத்த உலகமும் ஊரடங்கால் முடங்கியது. இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் நிம்மதியடைந்தன. இந்நிலையில் தற்போது சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் கொரோனா பரவல் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதாவது சீனாவில் பிஎப் 7 எனும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இதுவரை இல்லாத வகையில் சீனா மோசமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிராமங்களில் வேகமெடுத்த கொரோனா

கிராமங்களில் வேகமெடுத்த கொரோனா

தற்போது தினமும் சீனாவில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், சுமார் 5 ஆயிரம் பேர் இறந்து வரலாம் எனவும் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கூட பொதுமக்கள் போராட்டத்தால் கொரோனா கட்டுப்பாடுகள் சீனாவில் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் இயல்பாக வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் இன்னும் கூட கொரோனா பாதிப்பு குறையவில்லை. இந்நிலையில் தான் சீனாவில் தற்போதும் கூட கொரோனா பரவல் என்பது கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் போன்று மக்கள் குறைவாக வசித்து வரும் இடங்களிலும் கொரோனா பரவல் என்பது வேகமாக தாக்கி வருகிறது.

 நோயாளிகள் அதிகரிப்பு

நோயாளிகள் அதிகரிப்பு

இதனால் சீனாவில் உள்ள பல கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளும் நிரம்பி வருகிறது. இதுபற்றி பல மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், ‛‛நாங்கள் ஒரு மாதத்தில் 100 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் டிசம்பரின் முதல் சில நாட்களிலேயே நோயாளிகளின் எண்ணிக்கை என்பது 500யை கடந்துவிட்டது. இன்னும் தெடார்ந்து சிகிச்சை அளிக்கிறோம்'' என தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னள.

மாற்று மருந்துகள் வழங்கல்

மாற்று மருந்துகள் வழங்கல்

இது ஒருபுறம் இருக்க கொரோனா மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் சில கிராம மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய கொரோனா பரவலால் கிராமங்களில் திறந்து இருக்கும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அவர்கள் நகர்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அங்கும் கூட மருந்து தட்டுப்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்துகள் வழங்கப்படுகின்றன.

 பக்கவிளைவால் பலி-முதியவர்கள் தற்கொலை

பக்கவிளைவால் பலி-முதியவர்கள் தற்கொலை

மேலும் கியான்சா டாட் காம் எனும் சீன செய்தி இணையதளம் ஒன்று சீனாவில் கிராமங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாகவும், குறிப்பாக முதியவர்கள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டிபிரைடிக் மருந்துகள் கிடைக்காததால் மாற்று மருந்துகள் வழங்கப்படுகிறது. இதனால் பக்க விளைவாக கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பை பலர் சந்தித்து இறந்து விடுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதவிர முதியவர்கள் பலரும் கொரோனா நோயால் தற்கொலை செய்து வருகின்றனர். விஷத்தை கடித்து பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருவதாகவும், கடந்த டிசம்பரில் இருந்து முதியவர்கள் தற்கொலை செய்து வருவதாக சோகமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+