For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியனின் பின் புறத்தை படம் பிடித்து அனுப்பிய "கியூட்" கியூரியாசிட்டி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாய்க் கிரகத்தை ஆராய நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலம், சூரியனின் மற்றொரு பக்கத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால், செவ்வாய் கிரகம் குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ளது கியூரியாசிட்டி விண்கலம். செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வரும் இந்த விண்கலம் தற்போது சூரியனின் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது.

 Curiosity: Tracking Sunspot Activity With Mars Rover

பூமியில் இருந்து சூரியனைப் பார்க்கும் போது அதன் ஒரு பக்கம் மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். ஆனால், சூரியனின் மற்றொரு பக்கத்தைப் புகைப்படங்களாக எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி.

இவை இதுவரை நாம் பார்த்திராத சூரியனின் பகுதியாகும். இந்த புகைப்படங்கள் சூரியனைப் பற்றி அறியவும், விண்வெளி தட்பவெப்பங்கள் குறித்த ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஷார்ப் மலையின் பாறைகளை ஆராய்ந்து வரும் கியூரியாசிட்டி விரைவில் அந்தப் பாறைகளில் துளையிட்டு மாதிரிகளை எடுத்து ஆராயவுள்ளது. இந்த நிலையில்தான் சைட் பை சைடாக சூரியனின் மறுபக்கத்தைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

தற்போது சூரியனின் இரு பக்கத்தையும் பார்க்கும், ஆராயும் வசதி பூமியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கியூரியாசிட்டி அனுப்பி வைத்துள்ள படங்கள் சூரியனின் மறுபக்கம் குறித்த பல பிரமிப்பான காட்சிகளை நமக்கு அளித்துள்ளது.

English summary
NASA's Curiosity Mars rover is currently busy checking out bedrock types on Mars' Mount Sharp as well as getting ready for a drill test. But Curiosity stall has time to looking up regularly to monitor sunspots on the side of the sun facing away from Earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X