For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய ஜனநாயகத்தில் அவசரநிலை ஒரு கரும்புள்ளி! ஜெர்மனிவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

முனிச்: ‛‛இந்தியாவில் உள்ள பல்வேறு கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் துடிப்பான வரலாற்றில் அவரசநிலை என்பது ஒரு கரும்புள்ளி'' என ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி7 கூட்டமைப்பாக உள்ளன. பொருளாதார ரீதியாக வளர்ந்து நாடுகளான இந்த நாட்டின் தலைவர்கள் ஆண்டு தோறும் உச்சிமாநாடு நடத்தி வருகின்றனர்.

மக்களாட்சியை காலில் போட்டு மிதித்த இந்திராவின் எமர்ஜென்சி..மன்கிபாத் உரையில் பிரதமர் மோடி விளாசல் மக்களாட்சியை காலில் போட்டு மிதித்த இந்திராவின் எமர்ஜென்சி..மன்கிபாத் உரையில் பிரதமர் மோடி விளாசல்

ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு

ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு

இந்தாண்டு ஜெர்மனியில் ஜி7 உச்சிமாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு தரப்பட்டது. மேலும் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அவசரநிலை கரும்புள்ளி

அவசரநிலை கரும்புள்ளி

இந்தியர்களாகிய நாம் அனைவரும் நம் நாட்டின் ஜனநாயகத்தை நினைத்து பெருமைப்படலாம். மேலும் ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பெருமையாக கூறலாம். கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை நமது ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது. இன்று ஜூன் 26. ஒவ்வொரு இந்தியனின் டிஎன்ஏவிலும் இருக்கும் இந்தியாவின் ஜனநாயகம் 47 ஆண்டுகளுக்கு முன்பு மிதித்து நசுக்கப்பட்ட நாளாக இது அறியப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயகத்தின் துடிப்பான வரலாற்றில் அவரசநிலை என்பது ஒரு கரும்புள்ளி.

உலகை வழிநடத்தும் இந்தியா

உலகை வழிநடத்தும் இந்தியா

கடந்த நூற்றாண்டில் ஜெர்மனியும், பிற நாடுகளும் தொழில் புரட்சியில் இருந்து பலனடைந்தன. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது. இதனால் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது 4வது தொழில் புரட்சியி் இந்தியா பின்தங்காது. இப்போது உலகையே இந்தியா வழிநடத்துகிறது.

80 கோடி பேருக்கு இலவச ரேஷன்

80 கோடி பேருக்கு இலவச ரேஷன்

இன்று நம் நாட்டில் ஒவ்வொரு கிராமமும் திறந்தவெளி இயற்கை உபாதை கழித்தல் இல்லாததாகவும், மின்சார வசதியுடன் 99 சதவீதம் கிராமங்கள் கியாஸ் சிலிண்டர் வசதியையும் பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டில் மட்டும் இந்தியா 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கி உள்ளது. ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை இந்தியா யூனிகார்ன் ஆக உள்ளது. நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியில் சாதனை

கொரோனா தடுப்பூசியில் சாதனை

கொரோனாவுக்கு எதிராக இந்தியா தனது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் எனக்கூறிய காலம் இருந்தது. ஆனால் இன்று நாட்டில் உள்ள வயது வந்தவர்களில் 90 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டுள்ளனர். பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பதை லட்சிய இலக்காக வைத்துள்ளோம். இலக்கை விட ஐந்து மாதங்களுக்கு முன்பே இதனை அடைந்தோம். இந்தியா இப்போது முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காவும் கனவுகளை நிறைவேற்ற தயாராக உள்ளது'' என்றார்.

English summary
‛‛The diversity of different cultures, food, dress, music and traditions in India makes democracy vibrant. Emergency is a black spot in the vibrant history of Indian democracy," says Prime Minister Narendra Modi among Indians living in Germany.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X