For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 பேருக்கு வேதியியலுக்கான நோபல்: ஒளிரும் மைக்ரோஸ்கோப் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: 2014 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 2 அமெரிக்க விஞ்ஞானிகளும், 1 ஜெர்மன் விஞ்ஞானியும் இந்த நோபல்பரிசினை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒளிரும் நுண்ணோக்கித் தொழில்நுட்பத்தை அதாவது fluorescence microscopy என்ற அதி நவீன நுண்ணோக்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்கள் இந்த மூவரும்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், உலக அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் உலகளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Eric Betzig, Stefan Hell, William Moerner win Nobel Prize in Chemistry

வேதியியல் நோபல் பரிசு

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ராயல் சுவிடிஷ் அறிவியல் அகாடமி வெளியிட்டது

மூவருக்கு பரிசு

2014 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எரிக் பெட்சிக், ஸ்டஃபான் ஹெல், வில்லியம் மோர்னர் ஆகிய 3 விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

2 அமெரிக்கர், 1 ஜெர்மானியர்

இவர்களில் எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னர் ஆகிய 2 விஞ்ஞானிகள் அமெரிக்கர்கள் என்றும் ஸ்டஃபான் ஹெல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன கண்டுபிடிப்பு?

இவர்களின் கண்டுபிடிப்பானது ஒளிரும் நுண்ணோக்கித் தொழில்நுட்பம் ஆகும். fluorescence microscopy என்பது

அது என்ன புளோரசன்ஸ்?

வழக்கமாக நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோப்) மூலம் ஒரு ஆர்கானிக் அல்லது இன்ஆர்கானிக் பொருளை ஆய்வு செய்யும்போது reflection அல்லது absorption மூலமாக ஆய்வு செய்வோம். ஆனால் இந்த நவீன நுண்ணோக்கியில் சம்பந்தப்பட்ட பொருள் மீது புளாரஸன்ஸ் அல்லது பாஸ்போரசென்ஸ் ஒளியைப் பாய்ச்சி மேலும் துல்லியமாக சம்பந்தப்பட்ட பொருளை ஆய்வு செய்ய முடியும். அதற்காகத்தான் இந்த நோபல் பரிசு.

English summary
Two US and one German scientist win Nobels for opening a window into the nanoworld with their development of ‘super-resolved fluorescence microscopy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X