For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளைகுடா நாட்டில் நெல் பயிரிட்டு சாதனை படைத்த இந்தியர்!

Google Oneindia Tamil News

துபாய்: கேரளாவைச் சேர்ந்த இந்தியரான ஒருவர், எண்ணெய் கிணறுகளுக்குப் பெயர் போன வளைகுடா நாடுகளில் நெல் பயிரிட்டு சாதனை புரிந்துள்ளார்.

வளைகுடா நாட்டில் வசிக்கும் கேரளாவாஇச் சேர்ந்தவர் சுதீஷ்குமார். இவர்தான் அந்த விவசாய சாதனையாளர். இது குறித்து அவர் கூறியபோது, "விவசாயத்தில் முன் அனுபவம் இல்லாத நான் அடிப்படையில் காமர்ஸ் பட்டதாரி. இருப்பினும் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதில் ஈடுபட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இதற்காக ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 மணி நேரம் வரையில் செலவு செய்ததாகவும் கூறினார்.தற்போது 90 நாட்களை கடந்த நெல் அறுவடை செய்த நிலையில் 100 நாட்களை கடந்த கோதுமை அறுவடைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவரின் முயற்சியால் வளைகுடா நாடுகளில் நெல் போன்ற பயிர்களை பயிரிட முடியும் என்ற சாதனையை நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை லிம்கா மற்றும் கின்னஸ் புத்தகங்களில் விரைவில் இடம்பெற உள்ளது.

English summary
An Indian expat who entered the record books in 2012 by growing the longest okra (41.91cm/16.5 inches), is gunning for another record of sorts by cultivating rice in the UAE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X