For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர்.. தவறான மீம்ஸ்களை கண்டுபிடிக்க ரோபோ.. பேஸ்புக் உருவாக்கி இருக்கும் ரொசெட்டா ஏஐ!

பேஸ்புக்கில் வெளியாகும் தவறான மோசமான மீம்ஸ்களை கண்டுபிடிக்க, பேஸ்புக் நிறுவனம் ரொசெட்டா என்ற ஏஐயை உருவாக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: பேஸ்புக்கில் வெளியாகும் தவறான மோசமான மீம்ஸ்களை கண்டுபிடிக்க, பேஸ்புக் நிறுவனம் ரொசெட்டா என்ற ஏஐயை உருவாக்கி உள்ளது.

பேஸ்புக் தற்போது உலகம் முழுக்க பல கோடி பயனாளர்களை வைத்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக்கில் வெளியாகும் தவறான கருத்துக்கள், மோசமான கருத்துக்கள், ஆபாசமான கருத்துக்களை கண்டுபிடிக்க அங்கு பணியாளர்கள் இருக்கிறார்கள்.

நாம் போடும் தவறான புகைப்படங்கள், பதிவுகளை கண்டுபிடித்து இவர்கள்தான் நீக்குவது. இதற்காக தனி ஆர்மியே வைத்து இருக்கிறார் மார்க்

முடியவில்லை

முடியவில்லை

ஆனால் இந்த பணியாளர்களால் தினமும் எல்லோரும் வெளியிடும் மோசமான கருத்துக்களை பார்வையிட முடியாது. எத்தனை பணியாளர்களை நியமித்தாலும் அது மிகவும் கடினம் ஆகும். இதனால் பேஸ்புக்கில் சில மோசமான தகவல்கள் சமயங்களில் நீக்கப்படாமலே போய்விடுகிறது.

ஏஐ

ஏஐ

இந்த நிலையில்தான் பேஸ்புக் ரொசெட்டா என்ற ஏஐயை கண்டுபிடித்துள்ளது. இந்த ரொசெட்டா அதுவாகவே ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கில் புகைப்படங்களை, மீம்களை சோதனை செய்து தவறானதை டெலிட் செய்து விடுகிறார். இதை உருவாக்க பேஸ்புக் அல்காரிதம் டெவலப்மென்ட் குழுவிற்கு 2 வருடம் ஆனதாக குறிப்பிடப்படுகிறது.

சிறப்பு என்ன

சிறப்பு என்ன

இதில் சிறப்பு என்னவென்றால், பொதுவாக பேஸ்புக் தவறான ஆபாசமான புகைப்படம் வீடியோ இருந்தால் கண்டுபிடித்துவிடும். ஆனால் ஒரு வீடியோவில் மறைமுகமாக ஒருவர் மோசமாக கிண்டல் செய்யப்பட்டால், ஒரு மீம் மூலம் ஒருவர் மோசமாக கிண்டல் செய்யப்பட்டால் அதை ஊழியர்கள் உட்கார்ந்து பார்த்து டெலிட் செய்வது கடினம். அந்த வேலையை இந்த ரொசெட்டா செய்துவிடும்.

எப்படி

எப்படி

இந்த ரொசெட்டா மிகவும் எளிதாக இயங்க கூடியது. நாம் வடிவேலை வைத்து ஒரு மீம் வெளியிட்டால், இது முதலில் வடிவேல் புகைப்படம் ஆபாசமாக இருக்கிறதா என்று சோதனை செய்யும், பின் அதில் இருக்கும் வாசகம் ஆபாசமாக உள்ளதா என்று சோதனை செய்யும் (புகைப்படத்தில் உள்ள வாசகத்தில் படிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது) . அதன்பின் இரண்டும் தவறாக இல்லை என்றால் மட்டுமே அந்த போஸ்ட்டை அனுமதிக்கும்.

English summary
Facebook brings Rosetta AI to fight against Memes issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X