புதிய பேயாக உருமாறும் பேன்சி பியர்... உலகத்தை கட்டுப்படுத்த துடிக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
உலகத்தை கட்டுப்படுத்த துடிக்கும் பேன்சி பியர்...வீடியோ

மாஸ்கோ: ரஷ்யாவில் இருக்கும் 'பேன்சி பியர்' என்ற ஹேக்கிங் குழு பல முக்கிய நிறுவனங்களை ஹேக் செய்து இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த 'பேன்சி பியர்' குழுவிற்கும் ரஷ்ய உளவுப்படைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவர்களின் முக்கிய குறி செய்தி நிறுவனங்கள்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பல நாடுகளில் நடந்த தேர்தல்களிலும் இவர்கள் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க பாதுகாப்பு துறை தொடங்கி ஜெர்மன் பாதுகாப்பு அமைப்பு வரை கஷ்டப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

யார் இந்த 'பேன்சி பியர்'

யார் இந்த 'பேன்சி பியர்'

ரஷ்யாவில் 'பேன்சி பியர்' என்ற ஹேக்கிங் குழு ஒன்று இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இவர்கள் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இந்த ஹேக்கிங் குழுவை ரஷ்யாவின் உளவு அமைப்பான 'ஜிஆர்யு' பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த குழு உருவாக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

இவர்கள் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள். அதேபோல் ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடந்த தேர்தலிலும் இவர்கள் மறைமுகமாக வேலை பார்த்து இருக்கிறார்கள். இவர்களின் ஹேக்கிங் செயல்பட்டால் இந்த தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது என்று அந்த நாடுகள் தற்போது கூறியிருக்கிறது.

எப்படி

எப்படி

இந்த ஹேக்கிங் முறையை இவர்கள் மிகவும் திறமையாக செய்கிறார்கள். 'பேன்சி பியர்' பொதுவாக மக்களின் கணக்குகளை ஹேக் செய்யாது. ஆனால் பேஸ்புக்கை மொத்தமாக ஹேக் செய்யும். மேலும் பேஸ்புக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் பார்த்துக் கொள்ளும். இப்படி ஹேக் செய்து எந்த தலைவரை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டுமோ அவர்களை குறித்து செய்திகள் பரப்பும். இதன் மூலம் பேஸ்புக்கில் அந்த தலைவருக்கு எதிரான பார்வை உருவாக்கப்படும்.

செய்தி தாள்கள்

செய்தி தாள்கள்

இவர்கள் முக்கியமாக செய்தி நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் திட்டமிட்டு தாக்குகிறார்கள். அதன்படி 2014ல் இருந்து மட்டும் 200க்கும் அதிகமான பத்திரிகைகளை ஹேக் செய்து இருக்கிறார்கள். அதேபோல் பல பத்திரிக்கையாளர்களின் பேஸ்புக் பக்கத்தையும் ஹேக் செய்துள்ளனர். மேலும் அவர்கள் கணக்குளை ஹேக் செய்து அதில் இருக்கும் தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Russia's Fancy Bear hacking group strikes world. They have nearly hacked 200 Journals and Journalist accounts. They have also did a major work in Elections.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற