ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழாவில் ‘நெருப்புடா’ அருண்ராஜா, பாடகர் இராஜகணபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக, 'நெருப்புடா' அருண்ராஜா, பாடகர் இராஜகணபதி பங்கேற்கிறார்கள்.

பாடகர் அருண்ராஜா காமராஜ், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள பேரூரில் பிறந்த இவர் திரைப்பட பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் நகைச்சுவை நடிகர், திரைப்பட இணை இயக்குநர் மற்றும் குறும்பட இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றார்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, singers Arun raja and Raja Ganapathy is a Chief guest

கபாலி, பீட்சா, உயிர்மொழி, தெறி, காதலும் கடந்து போகும், வாகா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். கபாலி, பைரவா, கொடி உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

பாடகர் இராஜகணபதி, மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்த இவர் தனது சிறு வயதில் இருந்து மரபிசை பயிற்சி பெற்றவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டிகளில் சிறந்த பாடகராக திகழும் இவர், இறுதிப் போட்டிக்கு தேர்வானவர்.

இவர்களின் வரவேற்பு விருந்து மற்றும் திரை மெல்லிசை விருந்து வரும் 30ம் தேதியும் ஜூலை மாதம் 2ம் தேதியும் மாலை நேரத்தில் தமிழ் உள்ளங்களை நெகிழ்ச்சி அடையச் செய்ய காத்திருக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, singers Arun Raja and Raja Ganapathy is a Chief guest at Minneapolis Convention Center in Minnesota.
Please Wait while comments are loading...