For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறு வயதில் பயந்த மாதிரியே! மனிதனின் வயிற்றில் வளர்ந்த "அத்திமரம்"! வெளிச்சத்துக்கு வந்த "மர்மம்"

Google Oneindia Tamil News

அன்காரா: துருக்கியில் ஒரு மனிதனின் வயிற்றில் இருந்து அத்தி மரம் வளந்திருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்டவரின் வயிற்றில் இருந்து இந்த மரம் முளைத்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது பல மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளன.

சிறு வயதில் ஏதேனும் பழங்களை சாப்பிடும் போது கொட்டைகளை தெரியாமல் விழுங்கிவிட்டால், "அவ்வளவுதான்.. உன் வயிற்றில் மரம் முளைக்கப் போகிறது" என பெரியவர்கள் விளையாட்டாக பயமுறுத்துவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழங்களை வச்சு சாலட் போடலாம்.. ஜூஸ் போடலாம்.. ஆனா இங்க ஒருத்தர் என்ன செய்றார் பாருங்க! பழங்களை வச்சு சாலட் போடலாம்.. ஜூஸ் போடலாம்.. ஆனா இங்க ஒருத்தர் என்ன செய்றார் பாருங்க!

 மர்மம் நிறைந்த ஒற்றை அத்திமரம்..

மர்மம் நிறைந்த ஒற்றை அத்திமரம்..

துருக்கியில் கிரேக்க எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சில ஆண்டுகளாக அகழ்வாய்வு நடைபெற்று வந்தது. அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாய்வு செய்துள்ளனர். அந்த சமயத்தில், துருக்கியில் இல்லாத மரமான அத்தி மரம், ஒன்றே ஒன்று அங்கு வளர்ந்திருந்தது.இதனால் ஆச்சரியமடைந்த ஆராய்ச்சியாளர்கள், அந்த மரத்தின் அடிப்பகுதியை தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 வயிற்றில் இருந்து..

வயிற்றில் இருந்து..

ஏனெனில், ஒரு மனிதனின் சடலத்தின் வயிற்றில் இருந்து அந்த அத்தி மரம் முளைத்திருந்து. இதையடுத்து ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், அழுகி உருக்குலைந்த நிலையில் இருந்த அந்த சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த நபர், துருக்கி பழங்குடியினத்தை சேர்ந்த அகமது அர்க்யூன் என்பது தெரியவந்தது.

இனப் போராளி

இனப் போராளி

துருக்கியில் இயங்கிய பழங்குடியின அமைப்பில் இணைந்து செயல்பட்ட அகமது அர்க்யூன், கிரேக்க பழங்குடியினத்தவருக்கு எதிராக சண்டையிட்டு வந்துள்ளார். அந்த சமயத்தில், 1974-ம் ஆண்டு எதிரிகள் அவரை பிடித்து இங்குள்ள குகை ஒன்றுக்கு கொண்டு சென்று வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துள்ளனர். அவரை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸாரும் அவரை தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் எதிரிகளுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கலாம் என கருதப்பட்டு வந்தது.

 45 ஆண்டு மர்மம் விலகியது..

45 ஆண்டு மர்மம் விலகியது..

ஆனால் இப்போதுதான் இந்த அத்திமரம் மூலமாக அகமது அக்க்யூனின் குறித்த மர்மம் விலகியுள்ளது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு அகமது அர்க்யூன், அத்திப்பழத்தை சாப்பிட்டிருப்பதாகவும், அந்த அத்திப்பழத்தின் விதைதான் அவரது வயிற்றில் இருந்து வளர்ந்துள்ளதாகவும் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டவரின் வயற்றில் இருந்து வளர்ந்த அத்திமரம், அவரை அடையாளம் காண உதவிய சம்பவம் துருக்கியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

English summary
In a weird incident in Turkey, A body of a man, who was murdered about forty years ago, was spotted after a tree grew from his stomach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X