For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிவி சேனல் லைவ் விவாத நிகழ்ச்சியில் வக்கீல்-மதகுரு கைகலப்பு! நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு காயம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்து நாட்டு தொலைக்காட்சி நேரடி விவாதத்தின் போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த இஸ்லாமிய மதகுருவான இமாம் முஸ்தபா ரஷீத் ஷூவால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டின், பிரபலமான ஏ டி.வி.யில் நேரலையாக நடந்து கொண்டிருந்த ஒரு விவாத நிகழ்ச்சியில், வழக்கறிஞர் நபிக் அல் வாஸ்க் மற்றும் இமாம் முஸ்தபா ரஷீத் இருவரும் பங்கேற்றனர்.

Fight broke out in Egypt tv channel

விவாதத்தின் போது, முஸ்தபா ரஷீத், பெண்கள் அணியும் பர்தா குறித்து கருத்து தெரிவித்தார். குறித்த கருத்தால் அதிருப்தியடைந்த வழக்கறிஞர் ஆக்ரோஷமாக வாதிட்டார். இருவரும், ஒருவரை பார்த்து மற்றொருவர், வாயை மூடு என கத்தினர்.

ஒரு கட்டத்தில் இருக்கையில் இருந்து எழுந்த நபிக் அல் வாஸ்க், தனது ஷூவை கழட்டி இமாம் முஸ்தபா ரஷீத் மீது தாக்குதலில் ஈடுபட்டார். உடனே தொலைகாட்சி ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்தினர்.

இதில், கேமிராமேன் காயமடைந்தார். நிகழ்ச்சி நடத்தியவரும் காயமடைந்தார். டேபிள் உடைந்தது. சம்பவத்தை தொடர்ந்து இமாம் முஸ்தபா ரஷீத் உடனே ஸ்டூடியோவை விட்டு வெளியேறினார்.

English summary
An fight broke out in Egypt tv channel while live debate was going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X