For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் உள்ள டார்டச் டவரில் மீண்டும் பயங்கர தீ விபத்து

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் உள்ள 84 அடுக்குமாடி கட்டிடமான டார்ச் டவரில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக்கத்தின் துபாயில் உள்ளது டார்ச் டவர் எனப்படும் 84 அடுக்குமாடி கட்டிடம். அந்த கட்டிடத்தின் 9வது மாடியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

9வது மாடியில் இருந்து பிற தளங்களுக்கும் தீ மளமளவென பரவியது.

தீ

தீ

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ கொழுந்துவிட்ட எரிந்தபோது அதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

காயம்

காயம்

டார்ச் டவர் தீ விபத்தில் யாரும் காயம் அடைந்ததாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. மேலும் தீ விபத்திற்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை.

மீண்டும்

மீண்டும்

2011ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடுகள்

டார்ச் டவரில் பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தான் குடியிருக்கிறார்கள். அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள 30 முதல் 40 குடியிருப்புகளுக்கு தீ பரவியதாக கூறப்படுகிறது.

English summary
Fire broke out at the 84-storey Torch tower near Dubai in the United Arab Emirates on friday morning. Fire was brought under control after two hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X