For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தோல்வியில் முடிந்தது அமெரிக்காவின் முதல் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் முதல் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை தோல்வியடைந்துள்ளது அங்குள்ள மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறவியிலேயே கருப்பை இல்லாத பெண் ஒருவருக்கு, அறுவைச்சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருப்பையை மீண்டும் அதே முறையில் அப்புறப்படுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உடலுறுப்புகள், மற்றவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் நடைமுறை உள்ளது. தற்போது மருத்துவ உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியால் கைகள், முகம், தோல்கள் மற்றும் பிற உறுப்புகளும் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன.

இந்நிலையில், பிறவியிலேயே கருப்பை இல்லாத அல்லது நோய் காரணமாக கருப்பை அகற்றப்பட்ட பெண்களும், கர்ப்பம் அடைந்து குழந்தையை பெற்றெடுக்கும் வகையில், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை குறித்து ஆய்வுகள் சர்வதேச அளவில் நடந்து வருகின்றன.

கருப்பை மாற்று ஆபரேசன்...

கருப்பை மாற்று ஆபரேசன்...

பெரும்பாலும் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு, இறந்த பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட கருப்பை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு முன், துருக்கியிலும், சவுதி அரேபியாவிலும், இத்தகைய கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள், கருத்தரிப்பதில் தோல்வி ஏற்பட்டது.

வெற்றி...

வெற்றி...

ஆனால், சுவீடன் நாட்டில், வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உலகிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

இந்நிலையில், அமெரிக்காவில் முதன்முறையாக 26 வயது பெண் ஒருவருக்கு, கடந்த மாதம் 24ம் தேதி கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இறந்த 30 வயது பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பை இப்பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

அகற்றம்...

அகற்றம்...

இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் திடீரென அப்பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் அந்தக் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

முன்னேற்றம்...

முன்னேற்றம்...

பிறவியிலேயே கருப்பை இல்லாதவரான அப்பெண்ணின் உடல், இந்தப் புதிய கர்ப்பப்பையை ஏற்றுக் கொள்ளவில்லை என மருத்துவர்கள் கருதுகின்றனர். தற்போது கருப்பை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

அமெரிக்காவின் முதல் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை தோல்வியில் முடிந்தது அந்நாட்டு மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

English summary
The first uterus transplant in the United States has failed, and the organ was surgically removed on Tuesday, officials at the Cleveland Clinic said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X