For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்பட 4 இந்தியர்களுக்கு 'சிறந்த புலம்பெயர்ந்த அமெரிக்கர்' விருது

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட 4 இந்திய-அமெரிக்கர்களுக்கு கௌரவ விருதான சிறந்த புலம்பெயர்ந்தவர்கள், அமெரிக்காவின் பெருமை விருது வழங்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கார்னகி கார்பரேஷன் ஆண்டுதோறும் ‘சிறந்த புலம்பெயர்ந்த அமெரிக்கர்' விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.

 Four Indian-Americans honoured with Great Immigrants Award

இந்த ஆண்டின் விருதுக்கு இந்திய - அமெரிக்கர்களான கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலான ப்பி.பி.எஸ். நியூஸ் ஹவர் தொகுப்பாளரும், மூத்த நிருபருமான ஹரி ஸ்ரீனிவாசன், அமெரிக்காஸ் மற்றும் மெக்கின்சி கம்பெனியின் தலைவரான விக்ரம் மல்ஹோத்ரா, அமெரிக்க விமர்சகர்கள் வட்ட உறுப்பினரும், விருதுபெற்ற பிரபல நூலாசிரியருமான பாரதி முகர்ஜி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இவர்களை தவிர பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷாய்ஸா ரிஸாவி உள்பட மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 42 பேர் ‘சிறந்த புலம்பெயர்ந்த அமெரிக்கர்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ‘கார்னிஜி கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் செய்திக்குறிப்பில், ‘இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (புலம்பெயர்ந்த) அமெரிக்கர்கள் அனைவரும் இந்த நாட்டை உருவாக்கிய நமது மூதாதையர்களைப் போன்ற சிறப்புக்குரியவர்கள் ஆவார்கள்.

பொருளாதார வாய்ப்பு, கல்வி, அரசியல் மற்றும் மதரீதியான அடைக்கலம், பாதுகாப்பு, தங்களது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது ஆகிய நோக்கங்களுக்காக அமெரிக்காவை தேடிவந்த இவர்கள் அனைவரும் இதர அமெரிக்க மக்களைப்போல் இந்நாட்டின் பொது நம்பிக்கையை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் ஜூன் 30-ம் தேதி இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian-origin Google CEO Sunder Pichai and three other Indian-Americans are among the 42 US nationals honoured with this years prestigious "Great Immigrants: The Pride of America" award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X