Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரத்தின கல்".. வியக்க வைக்கும் இந்த "காஸ்ட்லி" வாட்ச் பற்றி தெரியுமா? விலையை கேட்டா ஆடி போயிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

பெர்ன்: கை கடிகாரங்கள் குறித்து விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், தற்போது சந்தையில் புதிய கடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

Girard-Perregaux நிறுவனத்தின் இந்த புதிய கடிகாரங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

1791ம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களுக்காக ஆடம்பர கை கடிகாரங்களை தயாரிக்க தொடங்கியது.

ஆடம்பர வாட்ச்

ஆடம்பர வாட்ச்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த நிறுவனம் தயாரிக்கும் வாட்ச்கள் பெரும்பாலும் கைகளால்தான் தயாரிக்கப்படுகிறது. அதனால் இதன் ஒவ்வொரு பாகங்களும் உன்னிப்பாக பார்த்து பார்த்து வடிவமைக்கப்படுகிறது. இப்பணியில் உலகின் தலை சிறந்த கைவினை கலைஞர்கள், பொறியாளர்களை Girard-Perregaux நிறுவனம் பயன்படுத்துகிறது. அதனாலேயே இந்த வாட்சகளின் விலையும் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் வாட்ச்களின் ஆரம்ப விலை ரூ.3.3 லட்சமாகும். அந்த வகையில் தற்போது 'Cosmos' வரிசையில் மேலும் சில கடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இந்த Cosmos வகை கடிகாரங்கள் முதன் முதலில் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.

தங்கம்

தங்கம்

தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் வாட்கள் மிகவும் தனித்துவமானதாகும். இந்த வாட்ச்களில் பூமியிலிருந்து கிடைக்கும் பல்வேறு ரத்தின கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது முதலாவது அவென்டுரைன். இந்த வகை ரத்தின கற்கள் பச்சை நிறத்தில் இருக்கும். பூமியில் கிடைக்கும் விலையுயர்ந்த கற்களில் இதுவும் ஒன்று. பொதுவாக இக்கற்கள் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருப்பவர்கள் அணிந்திருப்பார்கள். அதேபோல இந்த வாட்சகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு கல் ஓனிக்ஸ். இதுவும் ஒருவகை விலையுயர்ந்த ரத்தின கல்தான். அதேபோல அப்சிடியன் எனப்படும் மற்றொரு ரத்தினத்தை பயன்படுத்தி இந்த வாட்ச்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று ரத்தின கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மற்ற வாட்ச்களிலிருந்து இது தனித்துவமாக தெரிகிறது.

இரவு பகல்

இரவு பகல்

சரி என்ன வெறும் ரத்தின கற்கள் மட்டும்தானா? என்று கேட்டால் அதுதான் கிடையாது. இந்த வாட்சில் இரண்டு வட்டங்கள் இருக்கும். இதில் ஒன்றில் நட்சத்திரங்கள் இருக்கும். மற்றொன்றில் உலக வரைபடம் இருக்கும். பகல் இரவை பொறுத்து இது மாறிக்கொண்டே இருக்கும். எனவே 10.10 மணி எனில் அது இரவா? பகலா? என்பதைக்கூட உங்களால் உணர்ந்துகொள்ள முடியும். இதில் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டதை போல இது அனைத்தும் வெறும் கைகளால் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சில் மொத்தம் 368 தனிப்பட்ட பாகங்கள் இருக்கின்றன.

எடை

எடை

பொதுவாக கை கடிகாரமாக இருந்தாலும் சரி, சுவர் கடிகாரமாக இருந்தாலும் சரி அதில் சில நேர மாறுபாடுகள் இருக்கும். இவ்வாறான நேர மாறுபாட்டிருக்கு புவியீர்ப்பு விசை பிரதான காரணமாகும். தற்போதைய காலத்தில் மொபைலில் காட்டப்படும் நேரம்தான் துல்லியமானதாகும். ஆனால் Girard-Perregaux வாட்களில் உங்களால் இந்த நேர மாறுபாட்டை பார்க்க முடியாது. இதுதான் இதன் சிறப்பம்சம். ஒருமுறை நேரத்தை சரியாக வைத்துவிட்டு ஓட விட்டுவிட்டால் போதும். அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். சரி இதில் இவ்வளவு சிறப்பம்சம் இருக்கே இந்த வாட்ச் என்ன ஒரு அரை கிலோ இருக்குமா? என்கிற சந்தேகம் உங்களுக்க எழலாம்.

டைட்டானியம்

டைட்டானியம்

சந்தேகம் சரிதான். ஆனால் இதன் எடைய குறைக்க இதன் பாகங்கள் அனைத்தும் டைட்டானியத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இலகுவாகதான் இருக்கும். இதன் பட்டைகள் முதலை தோலில் செய்யப்பட்டிருக்கும். இந்த கடிகாரத்தை கட்டிக்கொண்டு நீங்கள் 30 மீட்டர் அதாவது ஏறத்தாழ 100 அடி ஆழம் வரை நீந்தமுடியும். அந்த அளவு அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டதாகும். இந்த வகை வாட்ச்கள் ஒவ்வொரு பதிப்பிலும் ஒன்று மட்டும்தான் தயாரிக்கப்படும். இதன் விலை எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+