தங்கத்தை வைத்து சீனர்கள் ஆடும் ஆட்டம்.. கொத்து கொத்தாக வந்த மக்கள்.. உலக மார்க்கெட்டே கதறுது!
ஷாங்காய்: சீனாவில் மக்கள் பலரும் கொத்து கொத்தாக தங்கத்தை விற்க தொடங்கி உள்ளனர். அதிக லாபம் ஈட்டுவதற்காக தங்கம் உச்சத்தில் உள்ள போதே அதை விற்க தொடங்கி உள்ளனர். இது உலக மார்க்கெட்டில் தங்க விலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷாங்காய் நகரின் முக்கிய வணிக வளாகம் ஒன்றில் தற்போது மக்கள் கூட்டம் ஒரு வித்தியாசமான இயந்திரத்தைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கிறது. அது ஏதோ ஏடிஎம் இயந்திரம் என்று நினைத்தால் தவறு; அது ஒரு அதிநவீன 'தங்க மறுசுழற்சி இயந்திரம்'. அதில் நீங்கள் தங்கத்தை கொடுத்து.. அப்படியே பணத்தை பெறலாம். கடையில் போய் விற்காமல் எடைக்கு எடை பணத்தை எளிதாக பெற முடியும். உலக சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தங்கள் கைவசமுள்ள பழைய நகைகளையும், பரம்பரைச் சொத்துகளையும் விற்று லாபம் பார்க்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்காமல், சுப நிகழ்ச்சிகளுக்கான முக்கிய சேமிப்பாகக் கருதும் நாடு சீனா. ஆனால், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் $5,600 என்ற வரலாற்றுச் சாதனை விலையை நெருங்கியுள்ளதால், மக்கள் இப்போது தங்கத்தை வாங்குவதை விட விற்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
டிஜிட்டல் முறையில் தங்கம் விற்பனை
'கிங்ஹுட் குரூப்' (Kinghood Group) என்ற நிறுவனம் வைத்துள்ள இந்த நிற இயந்திரம், ஒரு ரோபோவைப் போலச் செயல்படுகிறது. இதில் உள்ள திரையில் ஷாங்காய் தங்கச் சந்தையின் அப்போதைய விலை நிலவரம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும்.
மக்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் மோதிரங்கள், பதக்கங்கள் மற்றும் நாணயங்களை இயந்திரத்தில் போட்டதும், ஒரு ரோபோடிக் கை அவற்றை எடுத்து எடை போடுகிறது. பின்னர், ஒளி அலைகளைப் பயன்படுத்தி அந்தத் தங்கத்தின் தரம் துல்லியமாகப் பரிசோதிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறை முழுவதையும் வாடிக்கையாளர்கள் நேரலையாக வீடியோவில் பார்க்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.
10 மடங்கு லாபம்
இதன் மூலம் பலர் 10 மடங்கு லாபம் பார்த்து உள்ளனர். சீனாவில் மக்கள் பலரும் கொத்து கொத்தாக தங்கத்தை விற்க தொடங்கி உள்ளனர். அதிக லாபம் ஈட்டுவதற்காக தங்கம் உச்சத்தில் உள்ள போதே அதை விற்க தொடங்கி உள்ளனர். இது உலக மார்க்கெட்டில் தங்க விலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து நான்காவது நாளாக அதிரடியாகச் சரிந்துள்ளன. 40 வருடங்களில் இல்லாத மிக மோசமான சரிவை தங்கம், வெள்ளி சந்தித்துள்ளது. குறிப்பாக, வெள்ளி விலை ஒரே நாளில் 30 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் என்ன நடக்கிறது?
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் (US Fed) அடுத்த தலைவராக கெவின் வார்ஷ் (Kevin Warsh) என்பவரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைக்க உள்ளதாக வெளியான தகவலே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அவர் ஒரு பணவீக்க எதிர்ப்பாளர் (Inflation Hawk) என்று அறியப்படுவதால், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, டாலருக்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
தங்கம்: நியூயார்க் சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 13% வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் 5,000 டாலருக்கும் கீழ் சென்றது. இது 1980-களுக்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
வெள்ளி: வெள்ளி விலை இன்னும் மோசமாக 36% வரை சரிந்து வரலாற்றுச் சாதனை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய சந்தை (MCX) நிலவரம்
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) சர்வதேச சந்தையின் தாக்கம் அப்படியே எதிரொலித்தது. நேற்று பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை என்றாலும், மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுவதால் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது.
தங்கம்: ஒரு கிலோ தங்கத்தின் விலை சுமார் ₹33,113 (18%) சரிந்து, ₹1,50,849 என்ற அளவில் வர்த்தகமானது.
வெள்ளி: வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ₹1,07,971 (27%) சரிந்து, ₹2,91,922-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
-
மாதம் ₹10,000 வாடகை கொடுக்கிறீங்களா? இதே பணத்தில் வீடு வாங்கிய ரகசியம்.. 2026ல் லாபம் தரும் கணக்கு -
தங்க பத்திர திட்டம்: 8 வருஷம் காத்திருந்தால் முழு வரி விலக்கு.. தங்கம் வாங்குபவர்களுக்கு டபுள் லாபம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications