ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்க் கச்சேரி.. டென்ஷனாகி பாதியில் கிளம்பிய வட இந்தியர்கள்.. லண்டனில் கலகல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெம்ப்ளே: லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் தமிழ் பாடல்களை பாடியதால் வட இந்தியர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர். மேலும் சமூக வலைதளங்களிலும் ஏஆர் ரஹ்மான் தமிழில் பாடியதாகவும் பேசியதாகவும் கொந்தளித்துள்ளனர்.

தமிழகத்தின் தலைச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்தி உட்பட பல மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.

ஏராளமான இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை அனைத்து விருதுகளையும் குவித்துள்ளார்.

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை

இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் லண்டனின் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் கடந்த 8ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிக தமிழ் பாடல்கள்

அதிக தமிழ் பாடல்கள்

தமிழ் தலைப்பில் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் தமிழிலேயே பேசினார். நிகழ்ச்சியிலும் தமிழ் பாடல்களே பாடப்பட்டன.

புறக்கணித்த வடஇந்தியர்கள்

புறக்கணித்த வடஇந்தியர்கள்

இதனால் வெறுப்படைந்த இந்திவாலாக்கள் நிகழ்ச்சியை பாதியிலேயே புறக்கணித்து வெளியேறினர். மேலும் அவர்கள் இதுகுறித்து கொந்தளித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

குருட்டாம் போக்கில்..

குருட்டாம் போக்கில்..

அழகு தமிழில் நேற்று இன்று நாளை என தலைப்பிலேயே கூறியுள்ள நிலையில் அதனை கேட்டு தெரிந்து கொள்ளாமல் குருட்டான் போக்கில் வந்து உட்கார்ந்தது யார்? தமிழ் தெரியாத வட இந்தியர்கள் அதனை ஸ்பேனிஷ் என நினைத்தனரோ என்னவோ புரியாமல் நிகழ்ச்சிக்கு வந்தது யார்?

எங்களுக்கும் இப்படி தானே..

எங்களுக்கும் இப்படி தானே..

தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் தமிழர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சியில் தமிழில் பாடாமல் ஃபிரெஞ்சு மொழியிலா பாடுவார்? பொழுது போக்கு நிகழ்ச்சியிலேயே வேறு மொழியை புரிந்து கொள்ள முடியாமல் புறக்கணித்த வட இந்தியர்களே, தமிழ்நாட்டில் அனைத்திலும் இந்தியை திணிக்கும் போது எங்களுக்கும் இப்படி தானே இருந்திருக்கும்?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hindi speakers reportedly walked out of the ARR concert in Wembley. They complained most of the songs were in Tamil.
Please Wait while comments are loading...